Back to Top

முதலீடுகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

முதலீடுகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

February 23, 2021  01:54 pm

Bookmark and Share
வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகள் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் ணழழஅ ஊடாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஸ் பத்திரண, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமைத்துவ குழு திறைசேரியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டை நாட்டில் முன்னெடுப்பதற்காக விரைவான அனுமதி வழங்குவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலீடுகளின் போது சுற்றாடல் பாதுகாப்பு விடயம் கவனத்தில் கொள்ளப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் தொடர்பில் உலக நாடுகளில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இந்த முதலீட்டைப் பெறுவதில் போட்டி நிலை இல்லை. எனது குறிக்கோள் முதலீட்டைப் பெற்றுக்கொள்வதே ஆகும். அரசாங்கம் சுற்றாடல் பாதுகாப்பினையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

இரண்டையும் கருத்தில் கொண்டு நாட்டில் இந்த முதலீடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

03. முதலீடுகளை துரிதப்படுத்தல்

அண்மையில் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் சிலர் இலங்கையில் முதலிடுவதற்காக தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவ்வாறான முதலீட்டாளர்களுக்கு வசதியளிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள பொறிமுறை நீண்ட செயன்முறையைக் கொண்டுள்ளதால், முதலீட்டாளரின் ஆர்வத்திற்கமைய இலங்கையில் முதலீடுகள் தொடர்பான அதிகாரிகள் கருத்திட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சி எடுக்க நேரிட்டுள்ளது. இந்நிலையின் கீழ் அவ்வாறான முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மிகவும் முறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கான துரித தேவையுள்ளமையை அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது. அதனால், ´அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு முகாமைத்துவ குழு´ எனும் பெயரில் திறைசேரி செயலாளரின் தலைமையில் ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் முதலீட்டு சபையின் தலைவரின் பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமிப்பதற்கும், முதலீட்டு யோசனைகளுக்கு துரிதமான அனுமதிகளை வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் குறித்த குழுவிடம் ஒப்படைப்பதற்கும் நித அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.