
மேலும் 732 பேர் பூரணமாக குணம்
February 23, 2021 03:42 pm
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (23) மேலும் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 75,842 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.