
மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
February 23, 2021 08:58 pm
இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 492 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.