Back to Top

கப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்

கப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள்

March 4, 2021  06:01 pm

Bookmark and Share
வடக்கினையும், தெற்கையினை கடற்வழிமார்க்கமாக கப்பற் சுற்றுலாத்துறையினை உருவாக்க அரசாங்கத்தினால் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இத்திட்டம் கடற்வழிமார்க்கமாக சுற்றுலாத்துறை என்பது யாழ்ப்பாணம், கொழும்பு, தலைமன்னார் என்ற முக்கோணவலய திட்ட அமைப்பாக உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி என்பது காலத்திற்கு எற்ப மாற்றம் அடையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால் கப்பற் சுற்றுலாத்துறையின் ஊடாக பொருளாதார ரீதியாக வருமானத்தினை வடமாகாணத்தில் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும் அதுவே எமது எதிர்பார்ப்பு என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாகாணத்தின் கப்பற்சுற்றுத்துறை அபிவிருத்தியினை எதிர்காலத்தில் சிறந்தமுறையில் உருவாக்க உள்ள நிலையில் எதிர்காலத்தில் கப்பற்சுற்றுலாத்துறை தொடர்பான சுற்றுலாத்துறை நிபுணர் குழுவினர்களுடான உயர்மட்ட சந்திப்பு இன்று யாழ் வேலனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் கடற்கரை பகுதியின் அருகாமையில் நடைபெற்றது.

இவ் சந்திப்பிற்கு மேற்பார்வைகளை மேற்கொள்ளுவதற்காக பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு உரிய சுற்றுலாத்துறை நிபுணர்கள் கொண்ட குழுவினர்களிடம் திட்டமுன்மொழிவுகளுக்கான கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் யூன் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் கடற்றொழில் அமைச்சின் உயா அதிகாரிகள்,மற்றும்; சுற்றுலாத்துறை நிபுணர் குழுவின் அதிகாரி கிறீன் பியஸ் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

-யாழ். நிருபர் ரமணன்-