
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்?
April 6, 2021 10:20 am
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், தமிழகத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 13.80% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 9.98 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை காலை 9 மணி நிலவரப்படி10.58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 12.28 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதர மாவட்டங்களில்...
தருமபுரி - 15.29%
வேலூர் - 12.74%
காஞ்சிபுரம் - 14.80%
திருவண்ணாமலை - 14.97%
கடலூர் - 13.68%
கோவை 14.65%
கரூர் 16.46%
திருச்சி - 14.03%
தேனி - 14.06%
குமரி - 12.09%
திருப்பூர் - 13.66%
சேலம் - 15.76%
நாமக்கல் - 16.55%
ஈரோடு- 13.97%
நீலகிரி - 12.39% வாக்குகள் பதிவாகியுள்ளன.