
முதல் பெண் கிரிக்கெட்டின் வர்ணனையாளர் காலமானார்
April 6, 2021 11:05 am
இந்திய கிரிக்கெட்டின் முதல் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் தலைவர் சி.கே. நாயுடு. அவருடைய மகளான சந்திரா நாயுடு கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றியுள்ளார். 1977 இல் இந்தூரில் நடைபெற்ற பாம்பே - எம்.சி.சி. அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்முதலாக வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
சிறிது காலம் வர்ணனையாளராகப் பணியாற்றிய பிறகு அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். தனது தந்தையைப் பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் பெண் வர்ணனையாளர் என்கிற பெருமை அவருக்கு உண்டு.
இந்நிலையில் நீண்ட நாளாக உடல்நலமில்லாமல் இருந்த சந்திரா நாயுடு, நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
சந்திரா நாயுடுவின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.