Back to Top

 தமிழகத்தில்  39.61% வாக்குப்பதிவு

தமிழகத்தில் 39.61% வாக்குப்பதிவு

April 6, 2021  04:12 pm

Bookmark and Share
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நிலவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிவித்து வருகிறார்.

அதன்படி, இன்று மதியம் 1 மணியளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 37.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எங்கும் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. அதுபோல வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படின் உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவாவதாக சில பகுதிகளில் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் அதுபோன்ற புகார் எங்குமே பதிவாகவில்லை என்று பதிலளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் பகல் ஒரு மணி வரை உதகை 32.58 கூடலூர் 43.91 குன்னூர் 37.39சராசரி37.80 பல வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பிற்பகல் ஒரு மணிக்கு, 40.8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆண்டிபட்டி தொகுதி: 44.09 சதவீதம். பெரியகுளம் தொகுதி: 44.97 சதவீதம். போடி தொகுதி: 33.17 சதவீதம். கம்பம் தொகுதி: 44.96 சதவீதம்.

தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்குப்பதிவு பகல் 1.00 மணி நிலவரப்படி 46.56%:

தருமபுரி - 45.98-%, பாலக்கோடு- 47-%, பென்னாகரம் - 48%, பாப்பிரெட்டிப்பட்டி-45%, அரூர் (தனி)- 47-%.

தூத்துக்குடி மாவட்டத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 40.5 சதவீத வாக்குப்பதிவு:

மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 6.64 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணி நிலவரப்படி 25.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

நண்பகல் 1 மணி நிலவரம்: நண்பகல் 1 மணி நிலவரப்படி விளாத்திக்குளம் தொகுதியில் 44.18 சதவீதமும், தூத்துக்குடி தொகுதியில் 38.33 சதவீதமும், திருச்செந்தூர் தொகுதியில் 41.11 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 42.06 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 38.31 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 39.11 சதவீதமும் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியது.

திருச்சி 1 மணி வரையில் 41.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மணி நிலரப்படி வாக்குப்பதிவு விவரம்: மாவட்ட அளவில் 38%.

பழனி - 44.7, ஒட்டன்சத்திரம் - 47.6, ஆத்தூர் - 39.86, நிலக்கோட்டை - 32, நத்தம் -31.3, திண்டுக்கல் - 33.5, வேடசந்தூர் - 37.15.

நெல்லை மாவட்ட வாக்குப்பதிவு நிலவரம்: 1 மணி.

திருநெல்வேலி- 37.93%, அம்பாசமுத்திரம்- 38.18%, பாளையங்கோட்டை- 36.45%, நாங்குநேரி- 37.57%, ராதாபுரம்-35.89%.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் பகல் 1 மணி நிலவரப்படி, காரைக்குடியில் 43.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருப்பத்தூரில் 35.53 சதவீதமும், சிவகங்கையில் 41.5 சதவீதமும் மானாமதுரை (தனி) யில் 34.73சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

குமரி மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரம்: கன்னியாகுமரி 32.2%, நாகர்கோவில் 36.58 %, குளச்சல் 31.83 %, பத்மநாபபுரம் 33.42 %, விளவங்கோடு 32.48 %, கிள்ளியூர் 36.57 % மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரப்படி சராசரி வாக்குப் பதிவு 34.79 %.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணி 1.00 நிலவரப்படி சராசரி வாக்கு பதிவு 38%

ஊத்தங்கரை 41%, பர்கூர் 37%, கிருஷ்ணகிரி 44%, வேப்பனஹள்ளி 28%, ஓசூர் 32%, தளி 46%.

நாகை மாவட்டத்தில் 44.02 சதவீதம் வாக்குப் பதிவு.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 44.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 1,861 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.

பகல் 1 மணி நிலவரப்படி, ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 44.02 சதவீதம் வாக்குப் பதிவாகின.

தொகுதிவாரியான வாக்குப் பதிவு : சீர்காழி - 41, மயிலாடுதுறை - 40.96, பூம்புகார் - 43, நாகப்பட்டினம் - 42.89, கீழ்வேளூர் - 48.38, வேதாரண்யம் - 50.45.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை 1 மணி நிலவரப்படி 39.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தாராபுரம் (தனி) -33.70, காங்கயம் -32.29, அவிநாசி(தனி) -41.70, திருப்பூர் வடக்கு -36.20,திருப்பூர் தெற்கு -44, பல்லடம் -41, உடுமலை -39.60, மடத்துக்குளம் -35.30.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 43.34 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டம்: ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 48. 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 39.56% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி தொகுதியில் 47.03% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. கிணத்துக்கடவு 43.54%, சூலூர் 42.76%.

விழுப்புரம் மாவட்டத்தில் 1 பகல் மணி நிலவரப்படி 44.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

செஞ்சி - 43.52, திண்டிவனம் - 46.3, வானூர் - 40.5, மயிலம் -46.34, விக்கிரவாண்டி- 45.38, விழுப்புரம் -45.5, திருக்கோவிலூர் -45.16.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பகல் 1 மணி நிலவரப்படி 45.87 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 45.67, ஈரோடு மேற்கு 47.71, மொடக்குறிச்சி 48.86, பெருந்துறை 42, பவானி 50, அந்தியூர் 45, கோபி 247.40, பவானிசாகர் தொகுதியில் 40.01 சதவீத வாக்குகள் பதிவானது. 8 தொகுதிகளில் சராசரி வாக்குப்பதிவு 45.87 சதவீதம்.