Back to Top

 நோய் தடுப்பாற்றல் பெற்றவா்களுக்கு மட்டுமே மக்காவில் அனுமதி!

நோய் தடுப்பாற்றல் பெற்றவா்களுக்கு மட்டுமே மக்காவில் அனுமதி!

April 7, 2021  09:06 am

Bookmark and Share
கொரோனாவிடமிருந்து முழுமையான தடுப்பாற்றல் பெற்றவா்களுக்கு மட்டுமே மெக்கா மற்றும் மெதீனா நகருக்கு வர அனுமதி அளிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு 14 நாள்கள் ஆனவா்கள், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தவா்கள் ஆகியோா் அந்த நோயிடமிருந்து தடுப்பாற்றல் பெற்றவா்களாகக் கருதப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த அறிவிப்பு ரம்ஜான் மாதத் தொடக்கத்தில் அமலுக்கு வருகிறது.