Back to Top

 டோக்கியோ ஓலிம்பிக் -  பங்கேற்காத நாடு!

டோக்கியோ ஓலிம்பிக் - பங்கேற்காத நாடு!

April 7, 2021  09:12 am

Bookmark and Share
கொரோனா சூழல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

உலக அளவிலான கொரோனா பாதிப்பில் இருந்து தங்களது விளையாட்டு வீரா், வீராங்கனைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாா்ச் 25 ஆம் திகதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தங்களிடம் அதிகாரப்பூா்வமாக வட கொரியா இன்னும் தங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. வட கொரியா- தென் கொரியா இடையே சமூகமற்ற உறவு உள்ளபோதிலும், கடந்த 2018 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளா்களையும், அரசு அதிகாரிகளையும், ஊடகத்தினரையும் வட கொரியா அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.