Back to Top

விஜய் சைக்கிளில் சென்றமைக்கான காரணம் இதோ!

விஜய் சைக்கிளில் சென்றமைக்கான காரணம் இதோ!

April 7, 2021  01:37 pm

Bookmark and Share
தமிழக சட்ட மன்ற தேர்தல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அவரது வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வாக்குச் சாவடிக்கு சென்றிருந்தார்.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் அது பேசுபொருளாக மாறியதை தொடர்ந்து பல்வேறு கருத்துக் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், அவர் வாக்குச் சாவடிக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் விஜயின் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள வீதியில் வாக்குச் சாவடி அமைந்துள்ளதாகவும், அங்கு பெரிய வாகனங்களை பார்க்கிங் செய்யும் வசதி இன்மையாலும், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு துவிச்சக்கரவண்டியில் சென்றதாகவும் விஜய் தரப்பில் இருந்து தௌிவுப்படுத்தப்பட்டுள்ளது.