
சிறந்த கூட்டாண்மை பிரஜை நிலைத்தன்மை விருதுகளில் நான்கினை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி
April 8, 2021 09:26 am
சுற்றாடல் சமூகம் மற்றும் பொருளாதாரம் என்பனவற்றுக்கான அர்ப்பணிப்புக்கான உரிய
அங்கீகாரத்தை கொமர்ஷல் வங்கி பெற்றுக் கொண்டது. இலங்கை வர்த்தகச் சபையால் வழங்கப்பட்ட சிறந்த
கூட்டாண்மை பிரஜை நிலைத்தன்மை விருதுகளில் ஒட்டு மொத்தப் பிரிவில் மூன்றாம் இடம் உட்பட நான்கு
விருதுகளை வென்றதன் மூலம் இந்த அங்கீகாரத்தை அது நிலைநிறுத்தி உள்ளது.
நிதிப் பிரிவில் வங்கிக்கு சிறந்த செயற்பாட்டுக்கான துறைசார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆளுகைப்
பிரிவில் சிறந்த செயற்பாட்டுக்கான வகைப்படுத்தல் விருது கிடைத்துள்ளது. இலங்கையில் மிகச் சிறந்த
பத்து கூட்டாண்மை பிரஜைகள் வரிசையில் இடம்பிடித்துள்ளமைக்கான ஒரு விருதும் வழங்கப்பட்டது. ஒட்டு மொத்தப்
பிரிவில் மூன்றாம் நிலைக்கு மேலதிகமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நிதித் துறையில் வழங்கப்பட்டுள்ள விருதானது நாட்டின் மிகவும் முன்னேற்றகரமான வங்கி என்ற
கொமர்ஷல் வங்கியின் நிலைப்பாட்டுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது.
பொறுப்புள்ள செயற்பாடுகள் மூலம் அது மேற்கொண்டுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான
அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
ஆளுகைப் பிரிவின் வகைப்படுத்தல் விருதானது அதன் சட்டகங்கள் கட்டமைப்புக்கள் தேவைகளை ஈடுசெய்யும்
வசதிகள் மீதான செயற்பாடுகள் பங்குதாரர்களிடையே சமபங்கு நிலை ஒழுக்க நலன்பேணல் உகந்த
செயற்பாடுகள் என்பனவற்றுக்கான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
சிறந்த கூட்டாண்மை பிரஜை விருதானது மிகச் சிறந்த நிலைத்தன்மை செயற்பாடுகளைப் பேணியமைக்காக
வழங்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் நிலைத்தன்மையைப் பொருத்தமட்டில் கொமர்ஷல் வங்கி கொக்கல பிரதேசத்தில் சதுப்பு நில
மீள் உருவாக்கத் திட்டம் ஒன்றை அமுல் செய்து வருகின்றது. கடல்வாழ் உயிர் பல்லினத்தன்மையைப்
பேணும் வகையில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது. அத்தியாவசிய
உணவுகளில் இலங்கையை தன்னிறைவு கண்ட நாடாக மாற்றும் இலங்கை இராணுவத்தின் துருமிதுரு திட்டத்துக்கும்
கொமர்ஷல் வங்கி நிதி ஆதரவை வழங்கி வருகின்றது.
சமூகத்தின் மீதான வங்கியின் கண்ணோட்டம் அதன் ஊழியர் உறவுரூபவ் வாடிக்கையாளர் உறவு
என்பனவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள படி சமூகத்தின் மீதான அர்ப்பணம் அதன் பல்வேறு
செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் கல்வி சுகாதாரம்
மற்றும் கலாசாரம் ஆகிய பிரிவுகளில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களைச் சென்றடையும் வகையில்
400க்கும் மேற்பட்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களை வங்கி அமுல் செய்துள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக தனது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில்
கொமர்ஷல் வங்கி தான் நடத்திய ஆற்றல் கட்டமைப்பு நிகழ்ச்சிகள் மூலம் 7000
தொழில்முயற்சியாளகளை வலுவூட்டி உள்ளது.
பொருளாதாரத்துக்கான அதன் பங்களிப்பை பொறுத்தளவில் குறிப்பாக தற்போதைய நோய் பரவல்
காலத்தில் தனியார் வங்கிப் பிரிவில் கொமர்ஷல் வங்கியே ஆகக் கூடுதலான சலுகைகளை வழங்கி உள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கிய கொவிட்-19 மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சவால்கள் மிக்க
காலப்பகுதியில் மிக விரைவாக நிதி ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஏற்பாடுகளை வங்கி
செய்துள்ளது. தனது சொந்த மேலும் இரண்டு கடன் திட்டங்களுக்கும் அது நிதி வழங்கி உள்ளது. இதில் ஒன்று
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரப் பிரிவு தொழில்முயற்சியாளர்களுக்கு
உரியது. மற்றது திரிசக்தி கொவிட்-19 உதவிக் கடன் திட்டமாகும். இது நோய்ப்பரவல் காரணமாக
பாதிக்கப்பட்ட நுண் நிதி தொழில்முயற்சிகளுக்கு உரியது.
உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது
வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே
வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 890 தானியங்கி வங்கி
இயந்திரங்களையும் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது. வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் 19
கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. அதேபோல் மியான்மாரின்
நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும் மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக்
கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.