Back to Top

RCB அணியில் மேலும் ஓருவருக்கு கொரோனா

RCB அணியில் மேலும் ஓருவருக்கு கொரோனா

April 8, 2021  10:15 am

Bookmark and Share
ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் (ஆா்சிபீ) அணியில் இருக்கும் அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி இந்தியா வந்தபோது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 ஆவது பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவரிடம் கொரோனா அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு ஆா்சிபி வீரரான தேவ்தத் படிக்கல், அந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு அணியில் இணைந்துள்ளாா். ஆா்சிபி, நடப்பு சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை 9 ஆம் திகதி எதிா்கொள்கிறது.