
அமைவிடம் நகர மத்தியில் TRI-ZEN உடன் சௌகரியமான வாழ்க்கை
April 8, 2021 12:11 pm
நகர மத்தியில் வீடொன்றின் விலை கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துச் செல்வதன்
காரணமாக பெருமளவான புதிய வீடொன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போர்,
நகருக்கு அப்பால் வீடொன்றில் முதலீடு செய்கின்றனர். இதனால், நகர வாழ்க்கையில்
கிடைக்கும் பல அனுகூலங்களை இழக்கின்றனர்.
நகர வாழ்க்கையில் கிடைக்கும் அனுகூலங்கள் ஏராளமானவை, குறிப்பாக கொழும்பு
நகரின் மத்தியில் வசிப்பதனூடாக அளவிட முடியாத பல வசதிகளை
அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். ஒற்றை நிபுணர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு
கவர்ச்சிகரமான வாழிடப்பகுதியாக கொழும்பு நகரம் அமைந்திருப்பதுடன், கடந்த சில
ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சிகண்டு, வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தில் பெருமளவு
பெறுமதியைச் சேர்த்துள்ளது.
கொழும்பு நகர மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் TRI-ZEN -John Keells Properties’
முழு வாழ்க்கைமுறைத் தீர்வாக பார்க்கப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்களுக்கு பல
வெகுமதிகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் வகையில் அமைந்திருப்பதுடன்,
சௌகரியம், இலகுவாக சகல பகுதிகளையும் அணுகக்கூடிய வசதி, சமூகம், பெருமை
போன்றவற்றுடன் காலம், சுகாதாரம், வசதி மற்றும் நிதி ஆகியவற்றை விரயம் செய்ய
வேண்டிய அவசியமும் இல்லை.
சௌகரியம் மற்றும் இலகுவில் சென்றடையக்கூடிய வசதி – நகர மத்தியில் வசிப்பது
என்பதனூடாக பெருமளவான குடியிருப்பாளர்களுக்கு, நாட்டின் முன்னணி
பாடசாலைகள், வைத்தியசாலைகள், புகழ்பெற்ற விற்பனை மற்றும் களியாட்டப்பகுதிகள்
மற்றும் இரவு நேர ஓய்வுப் பகுதிகள், உணவருந்தல் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள்
போன்றவற்றை இலகுவாக சென்றடையக் கூடியதாக இருக்கும்.
TRI-ZEN இன் யூனியன் பிளேஸ் மத்திய முகவரியினூடாக, குடியிருப்பாளருக்கு ஓய்வு
மற்றும் பொழுதுபோக்குக்காக கங்காராம விகாரை, விஹாரமகாதேவி பூங்கா மற்றும்
பேர வாவி போன்றவற்றை இலகுவாக சென்றடையக்கூடியதாக இருக்கும். மேலும்,
நகரின் பிரதான சொப்பிங் மற்றும் உணவகப் பகுதிகளான Park Street Mews மற்றும்
Colombo City Centre போன்றனவும் அண்மித்துக் காணப்படுகின்றன. வங்கிகள், பிரதான
சுப்பர்மார்க்கெட்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை, நவலோக வைத்தியசாலை
போன்றன நடந்து செல்லக்கூடிய தூரத்தில் காணப்படுகின்றன. சிறுவர்களை வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டுமாயின், வைத்தியரின் அனுமதிக்கு உரிய காலத்தில் செல்ல
வேண்டுமாயின், அவசியமான அத்தியாவசிய பொருளை வாங்க வேண்டுமாயின், இந்த
வசிப்பிடப்பகுதி மிகவும் சௌகரியமானதாக அமைந்திருக்கும்.
கொழும்பிலுள்ள தொடர்மனை ஒன்றில் வசிக்கும் அனுபவம் என்பது அதன்
அமைவிடத்தைப் பொறுத்ததாக காணப்படும். பிரதான வீதிகளை அண்மித்தும், பொதுப்
போக்குவரத்துக் கட்டமைப்புகள் மற்றும் பிரயாணம் செய்வதற்கு இலகுவான முறையில்
அமைந்த வதிவிடத் தொகுதிகளை பெருமளவானோர் தெரிவு செய்கின்றனர். வீதிகளில்
குறைந்த நேரம் மற்றும் பணம் செலவிடப்படுவதனூடாக, குடும்பத்தார் மற்றும்
நண்பர்களுடன் அதிகளவு நேரத்தை செலவிட உதவியாக அமைந்திருக்கும். பிரேபுரூக்
பிளேஸ் ஊடாக நகரின் ஏனைய ஏனைய பகுதிகளுடன் TRI-ZEN
இணைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு போர்ட் சிட்டிக்கு 5 – 10 நிமிடங்களில் முச்சக்கர
வண்டியில் பயணிக்கக்கூடியதாக இருக்கும். நகரின் பிரதான வணிகங்கள்,
பாடசாலைகள், ஹோட்டல்கள், பிரதான சொப்பிங் நிலையங்கள், விளையாட்டுக்
கழகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் போன்றன இதனை அண்மித்துக்
காணப்படுகின்றன.
அண்மித்து வாழ்வோர் மற்றும் சமூகத்தார் – வசிப்போரின் தேவைகள் தொடர்பில் John
Keells Properties பெருமளவு கவனம் செலுத்தி, திட்டத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து
அருகாமையில் வசிப்போர் தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தி வருகின்றது. வீட்டு
உரிமையாளர்களின் வளர்ச்சி மற்றும் நலனில் அதிகளவு முதலீட்டை மேற்கொண்டுள்ள
இலங்கையின் முன்னணி வடிவமைப்பாளர், தொடர்மனை உரிமையாளர்களின்
அடிப்படைத் தேவைகள் மாத்திரமன்றி, முழுச் சமூகத்தின் வளர்ச்சியிலும் கவனம்
செலுத்துகின்றது. TRI-ZEN இல் வசிப்போருக்கு நெருக்கமான சமூக உறவுகளை
பேணக்கூடிய வகையில் செயலாற்றி, நீண்ட காலம் நிலைத்திருக்கும் பெறுமதி வாய்ந்த
உறவுகளைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
பிரதான நகரின் மையப்பகுதியான கொழும்பு 2 எனும் முகவரியை கொண்டிருக்கும் 53
மாடி தொடர்மனைத் தொகுதியில் நிபுணர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு தமக்கென ஒரு
இல்லத்தைக் கொண்டிருப்பதனூடாக வேலைத்தளத்துக்கும் பாடசாலைக்கு விரைவில்
பயணிக்கக்கூடியதாக இருக்கும். நடந்து செல்லக்கூடிய தூரத்தில் பொது போக்குவரத்து
வசதிகள் காணப்படுவதுடன், பெருமளவான வணிக நிலையங்கள் அருகாமையில்
காணப்படுகின்றன. இதனூடாக TRI-ZEN இல் வசிப்போர் பிரயாணச் செலவில்
சேமிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், கால விரயத்தையும் தவிர்த்துக்
கொள்ளலாம்.
2023 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன், ஒவ்வொரு TRI-ZEN தொடர்மனையும்
கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்று, இரண்டு மற்றும் மூன்று
படுக்கையறைகளைக் கொண்ட ‘smart-home’ அலகுகளாக காணப்படுவதுடன்,
குடும்பங்களுக்கு சொகுசான, சௌகரியமான வாழ்க்கையை அனுபவிப்பதற்கு
வழிகோலுவதாக அமைந்திருக்கும். உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக்
கொண்டுள்ளதுடன், கவர்ச்சிகரமான விலையில், மிகவும் பொருத்தமான வீடாக
அமைந்திருக்கும். நகர வாழ்க்கையில் கிடைக்கும் பல்வேறு சௌகரியங்களை
உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.
TRI-ZEN திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர் உறவுகள்
அணியுடன் +94-702-294294 ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது www.trizen.lk எனும்
இணையத்தளத்தைப் பார்க்கவும்.