Back to Top

கெரலின் ஜூரி கைது

கெரலின் ஜூரி கைது

April 8, 2021  02:15 pm

Bookmark and Share
2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக மகுடம் சூடிய இலங்கையை சேர்ந்த கெரலின் ஜூரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவாத்தோட்டம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவருடன் சுலா பத்மேந்திர என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமதி இலங்கை அழகிப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடொன்றை கடந்த தினம் மேற்கொண்டிருந்தார்.

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி அறிவிப்பொன்றை வௌியிட்டு, வெற்றியாளர் விவாகரத்து ஆனவர் என்பதால் அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது என கூறி இரண்டாவது இடத்தை பெற்றவரே வெற்றியாளர் என அறிவித்து மகுடத்தை பறித்து இரண்டாம் இடம்பெற்ற பெண்ணுக்கு அணிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்து ஆனவர் இல்லை என தெரிவித்து பேஸ்புக் பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஜூரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என அறிவித்த ஏற்பாட்டு குழு, மீண்டும் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.