Back to Top

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - பதக்க பட்டியல் விபரம்!

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் - பதக்க பட்டியல் விபரம்!

July 25, 2021  06:36 am

Bookmark and Share
2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 2 தென் கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் சீனாவைச் சேர்ந்த யாங் கிங் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.

இதேவேளை, பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி சீனா 3 தங்கம், 1 வெண்கலம் அடங்கலாக 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி 1 தங்கம் 1 வெள்ளி அடங்கலாக 2 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 1 தங்கம், 1 வெள்ளியுடன் 2 பதக்கங்களைப் பெற்று 3 வது இடத்திலும் இருக்கின்றது. தென் கொரியா 1 தங்கம், 2 வெண்கலப் பதக்கத்துடன் 4 வது இடத்தில் உள்ளது.

ஈக்குவடோர் 1 தங்கப் பதக்கத்தை வென்று 5 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed