Back to Top

பெண் ஒருவர்  கஞ்சாவுடன் கைது

பெண் ஒருவர் கஞ்சாவுடன் கைது

July 26, 2021  06:54 pm

Bookmark and Share
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் இருந்து கல்குடா, பசப்புசேனை பகுதிக்கு வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற கங்சா வியாபாரியான 62 வயதுடைய பெண் ஒருவரை 16 கிராம் 400 மில்லிக் கிராம் கஞ்சாவுடன் இன்று (26) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவதினமான இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ராஜகருணா தலைமையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் அசங்க ரட்ணாயக்கா மாவட்ட புலனாய்வு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் கமலநாதன், நிலாந்தன் ஆகியோர் வாழைச்சேனை பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது ஓட்டுமாவடி பிறைந்துறைச்சேனை பகுதியில் இருந்து கல்குடா பசப்புசேனை பகுதிக்கு பை ஒன்றில் கஞ்சாவை எடுத்துச் கொண்டு சென்ற நிலையில் அவரை பொலிஸார் மடக்கி பிடித்து சோனையிட்டபோது அவரிடமிருந்து 16 கிராம் 400 மில்லிக் கிராம் கஞ்சாவை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

குறித்த பெண் 62 வயதுடையவர் எனவும் கஞ்சா வியாபாரத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

Most Viewed