Back to Top

 மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளுடன் வியாழேந்திரன் சந்திப்பு

மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளுடன் வியாழேந்திரன் சந்திப்பு

July 29, 2021  05:51 pm

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று நிலைமை தொடர்பிலும் கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றும் வேலைத்திட்டம் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மாவட்ட போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. கணேசலிங்கம், உதவிப் பணிபாளர் வைத்தியர் பீ. மதன் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று (28) மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றுக்கொடுக்கப்படும் நிலையங்கள் தொடர்பிலும் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் ஒழுங்கமைப்பு பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனைத்து கிராம சேவகர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 60 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என அனைத்து பொது மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய தேவைப்பாடுகள் தொடர்பில் தனக்கு தெரிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் தீர்வினை பெற்றுத் தருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Most Viewed