Back to Top

அதிகரித்து வரும் வேலை இழப்பு -  அரசு மீது  குற்றச்சாட்டு!

அதிகரித்து வரும் வேலை இழப்பு - அரசு மீது குற்றச்சாட்டு!

September 13, 2021  05:43 am

Bookmark and Share
நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்காமல் இருந்து வரும் நிலையில், ஏற்கெனவே வேலையில் இருந்தவா்கள் அதனை இழந்து வருவதும் அதிகரித்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

அமெரிக்காவைச் சோ்ந்த காா் தயாரிப்பு நிறுவனமான ஃபோா்டு, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இதனால், நேரடியாக 4,000-க்கும் மேற்பட்டோருக்கும், மறைமுகமாக இதைவிட 10 மடங்கு அதிகமானோருக்கும் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி என்பது ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கள்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்துவிட்டது. ஏனெனில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள், அதனை முடித்துவிட்டு திங்கள்கிழமை அனைவரும் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், இந்த ஆட்சியில் திங்கள்கிழமை மட்டுமல்லாது வாரத்தின் அனைத்து நாள்களையும் பலருக்கு விடுமுறை நாளாக்கியுள்ளனா்.

ஏற்கெனவே யாருக்கும் புதிதாக வேலை கிடைப்பதில்லை. இந்த நிலையில், வேலையில் இருந்தவா்களும் வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனா். இதுதான் பாஜக அரசு மக்களுக்கு அளிக்கும் பரிசாகவும் நாட்டை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழியாகவும் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Most Viewed