Back to Top

எதிர்பார்ப்பைத் தூண்டும்  பார்டர் பட டிரெய்லர்

எதிர்பார்ப்பைத் தூண்டும் பார்டர் பட டிரெய்லர்

September 14, 2021  06:08 am

Bookmark and Share
அருண் விஜய் நடித்த பார்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

2020-ல் அருண் விஜய் நடித்த மாஃபியா வெளியானது. யானை, சினம், பார்டர், பாக்ஸர் போன்ற படங்களில் அருண் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

2009-ல் ஈரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அட்டகாசமாக அறிமுகம் ஆனார் அறிவழகன். இதன்பிறகு வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கினார்.

அருண் விஜய்யும் அறிவழகனும் ஒன்றிணைந்து பார்டர் என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். அருண், விஜய், ரெஜினா நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பார்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.