Back to Top

க.பொ.த உயர்தரத்தில் சாதனை படைத்த 25 பேருக்கு நோட்புக் கம்பியூட்டர்களை அன்பளிப்புச் செய்த செலிங்கோ லைஃப்

க.பொ.த உயர்தரத்தில் சாதனை படைத்த 25 பேருக்கு நோட்புக் கம்பியூட்டர்களை அன்பளிப்புச் செய்த செலிங்கோ லைஃப்

September 14, 2021  07:25 pm

Bookmark and Share
க.பொ.த உயர்தர பரீட்சையில் பெரும் சாதனை படைத்து பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ள 25 மாணவர்களுக்கு செலிங்கோ லைஃப் நிறுவனம் பல்துறை நோட்புக் கம்பியூட்டர்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இணைய வழி கல்வி முறை வழமையாகி உள்ள நிலையில் இந்த மாணவர்கள் தமது உயர் கல்வியைத் தொடரும் வகையில் அவர்களுக்கு இந்தக் கம்பியூட்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் காப்புறுதித் தலைவர்களான செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்தின் 20வது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 25 மாணவர்களும் செலிங்கோ லைஃப்பிடமிருந்து ஏற்கனவே தலா 144000 ரூபா பெறுமதியான புலமைப் பரிசிலை வென்றவர்கள். 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தத்தமது மாவட்டங்களில் சிறந்த பெறுபேறுகளை வென்றமைக்காக அந்தப் புலமைப்பரிசில்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Lenovo IdeaPad D330 ரகத்தைச் சேர்ந்த கம்பியூட்டர்களே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் நவீன ஆற்றல்ரூபவ் செயற்பாடு மற்றும் இலகுவான பாரம் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு செலிங்கோ லைஃப் இந்தத் தெரிவைச் செய்துள்ளது. சகல சுகாதார ரீதியான பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிளைகள் மட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது இவை உரிய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பிரணாம புலமைப் பரிசில் திட்டத்தின் 20வது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள செலிங்கோ லைஃப் கிளைகள் ஊடாக இவை வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட சில படங்களை இங்கு காணலாம். இந்தத் திட்டத்தின் கீழ் செலிங்கோ லைஃப் இதுவரை 2887 மாணவர்களுக்கு மொத்தம் 167 மில்லியன் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில்களை வழங்கி உள்ளது.

Most Viewed