Back to Top

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இலங்கையின் மிக மதிப்பிற்குரிய நிறுவனமாக 16வது ஆண்டாக சாதனை படைத்துள்ளது!

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இலங்கையின் மிக மதிப்பிற்குரிய நிறுவனமாக 16வது ஆண்டாக சாதனை படைத்துள்ளது!

September 14, 2021  07:39 pm

Bookmark and Share
ஆகஸ்ட் 2021இல் எல்எம்டியால் வெளியிடப்பட்ட தரவரிசையில் மிக மதிப்பிற்குரிய நிறுவனங்களில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்) முதலாம் இடத்தை தக்கவைத்து 16வது ஆண்டாக சாதனை புரிந்துள்ளது. மேலும் ஜேகேஎச் அனைத்து 12 பண்பு தரவரிசைகளிலும் அதாவது நிதி செயல்திறன் தர உணர்வு மேலாண்மை சுயவிவரம் நேர்மை புதுமையாக்கம் தனித்துவம் பெருநிறுவன கலாச்சாரம் சிஎஸ்ஆர் மற்றும் பேண்தகைமை தரிசனம் தேசிய முன்னோக்கு மனிதவள மற்றும் மக்கள் மேலாண்மை மற்றும் நெருக்கடி மேலாண்மை என்பவற்றில் முதலிடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டது.

எல்எம்டியால் நியமிக்கப்பட்டு மற்றும் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு நீல்சன்ஐகியூ நடத்திய கணக்கெடுப்பில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்பிலுள்ள 800 பதிலளித்தவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்களை வரிசைப்படுத்துவதற்காகவும் அவர்கள் ஏன் அவ்வாறு கருதப்படுகிறார்கள் என்பதை மதிப்பீடு செய்யவும் இக் கணக்கெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் எல்எம்டியின் மிகவும் மதிப்புமிக்க தரவரிசைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து 17 ஆண்டுகளில் ஜே.கே.எச் 16 வது முறையாக முதலாவது இடத்தில் உள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான (1,074) வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜேகேஎச்சின் தலைவர் கிருஷான் பாலேந்திரா எல்எம்டி இன் ஆகஸ்ட் 2021 இதழில் தனது பேட்டியில் எங்கள் மதிப்புகளுக்கு ஏற்ப எங்கள் வணிக செயல்முறைகளை செயல்படுத்த அர்ப்பணிப்புள்ள புத்தாக்கமுடைய மற்றும் திறமையான தொழில் வல்லுநர்கள் குழுவால் மட்டுமே சிறந்து விளங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். - ஒருமைப்பாடு நம்பிக்கை முதன்மைநிலை புதுமையாக்கம் மற்றும் அக்கறை இவை எங்கள் மூன்று அடிமட்ட இலக்குகளை அடைய உதவுகிறது. இந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் பெற்றதால்ரூபவ் அதிக செயல்திறன் கொண்ட அணிகளை உருவாக்குவது மற்றும் குழு உணர்வு மற்றும் மன உறுதியை மேம்படுத்துவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். எங்கள் மக்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் சிறப்பு அங்கீகாரத்தை பெறுவதற்காக ´கூடுதல் மைல் தூரம்´ செல்ல ஊக்குவிக்கப்படுவார்கள். எல்எம்டியின் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களில் 16 வது ஆண்டாக முதலாவது இடத்தைப் பிடித்ததைக் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் மேலும் இந்த அங்கீகாரத்துக்கு ஜோன் கீல்ஸில் உள்ள எங்கள் மக்களின் அர்ப்பணிப்பே காரணம் என்று கூறுகிறோம்.´

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (ஜே.கே.எச்) கொழும்பு பங்குச் சந்தையில் இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட பன்கூட்டு நிறுவனமானகும். இது 7 ​வெவ்வேறு தொழில் துறைகளில் உள்ள 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் எல்எம்டி இதழால் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம் என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும்ரூபவ் ஐ.நா. குளோபல் காம்பாக்ட்டின் பங்கேற்பாளராகவும் இருக்கும் ஜே.கே.எச் தனது சமூக பொறுப்புணர்வு பார்வையை நாளைக்கு தேசத்தை மேம்படுத்துதல் என்ற ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் வினையூக்கியாக செயல்படும் பிளாஸ்டிக்சைக்கிள் எனும் சமூக தொழில்முனைவோர் முயற்சி மூலமாகவும் இயக்குகிறது.

Most Viewed