Back to Top

கொரோனாவால் 60 வயதுக்கு மேற்பட்ட 106 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் 60 வயதுக்கு மேற்பட்ட 106 பேர் உயிரிழப்பு

September 15, 2021  05:25 am

Bookmark and Share
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் செப்டெம்பர் 13 உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதற்கமைய 11,567 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி செப்டெம்பர் 13 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட 01 ஆணும் 01 பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும் 13 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 60 ஆண்களும் 46 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 106 பேர் செப்டெம்பர் 13 உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நேற்று 2,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 490,955 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.