Back to Top

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

September 15, 2021  06:35 am

Bookmark and Share
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷூக்கு சென்று டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணம் நவம்பர் 14 ஆம் திகதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உடனடியாக பங்களாதேஷ் செல்லுகிறது. அங்கு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

மே 2015 க்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் செல்வது இதுவே முதன்முறை.

டி20 அட்டவணை:

முதல் டி20 - நவம்பர் 19
இரண்டாவது டி20 - நவம்பர் 20
மூன்றாவது டி20 - நவம்பர் 22

டெஸ்ட் அட்டவணை:

முதல் டெஸ்ட் - நவம்பர் 26-30
இரண்டாவது டெஸ்ட் - டிசம்பர் 4-8

Most Viewed