Back to Top

'தலைவி' படம் பார்த்து இயக்குநருக்கு  போன் செய்த ரஜினி!

'தலைவி' படம் பார்த்து இயக்குநருக்கு போன் செய்த ரஜினி!

September 15, 2021  06:51 am

Bookmark and Share
தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் விஜய்யைத் தொடர்புகொண்டு படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான ´தலைவி´ படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனவத் நடிக்க, எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்திருந்தார்.

விஜய் இயக்கிய இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கலவையான விமரிசனங்களைப் பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சில சம்பவங்கள் தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதாக விமரிசனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இந்தப் படம் நடிகர் ரஜினிகாந்த்துக்கு திரையிட்டுக்காட்டப்பட்டது. படம் பார்த்த ரஜினி இயக்குநர் விஜய்யை போன் மூலம் அழைத்து, படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.