Back to Top

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

September 21, 2021  12:57 pm

Bookmark and Share
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த 40 வயது நபரொருவரை இன்று (21) கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த வீட்டின் பின் பக்கமாக உள்ள காணியில் மூன்று கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நபர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டின் காணியை சோதனைக்குட்படுத்தியபோதே கஞ்சா செடிகள் நடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

-திருகோணமலை நிருபர் பாருக்-