Back to Top

இலங்கையின் ஜனரஞ்சகமான வாழ்வியல் வலைதளம் - நாடி.lk

இலங்கையின் ஜனரஞ்சகமான வாழ்வியல் வலைதளம் - நாடி.lk

October 8, 2021  05:44 pm

Bookmark and Share
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான வாழ்க்கை முறை சார் வலைத்தளமாக, ஆக்கபூர்வமான புதிய பரிமாணங்களுடன் பலவித உள்ளடங்கங்களையும் கொண்டு இலகு பயன்பாட்டு வடிவமைப்புடன் மக்களுக்கே உரித்தான முறையில் நாடி.lk 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கிய காலம் தொட்டே இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவதில் நாடி முக்கியத்துவம் காட்டி வருகிறது.

பல்வேறு சமுக வலைத்தளங்களில் தடம் பதித்துள்ள நாடி, பல அம்சங்களை கொண்டுள்ளது. அதில் இருக்கும் ஒவ்வொரு பகுதி தொடர்பான சிறு விளக்கம் இதோ.

*உணவை நாடி - இந்த பகுதியில் இலங்கையில் காணப்படும் உணவகங்கள், கடைகள் மற்றும் இலங்கைக்கே உரித்தான உணவு வகைகளை தயார் செய்யும் முறையை நீங்கள் காணலாம்.

* ருசியை நாடி - இங்கே இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் தற்கால உணவுகளை தயார் செய்யும் இலகு முறைகள் காணொளிகளாகவும் பதிவுகளாகவும் காணப்படும்.

*உலகை நாடி - நாடியானது இலங்கை வாழ்வியலை அதிகமாக பிரதிபலித்தாலும் உலகில் நடக்கும் சுவாரசியமா விடயங்களை தெரிவிக்க தவறுவதில்லை.

*அழகை நாடி - பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் தேவையான அழகு குறிப்புக்களை சரியான செய்முறையுடன் இந்த பகுதியில் பதிவுகளாக பெற்றுக்கொள்ளலாம்.

மனிதர்களை நாடி - இலங்கையின் தலைசிறந்த மனிதர்களோடு உலகிலும் சிறந்த மனிதர்களை பற்றி அறிய இந்த பகுதியை நாடலாம்.

*கலை கலாசாரத்தை நாடி - இலங்கையில் உள்ள பலவித கலைகளையும் நமக்கே உரித்தான கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் பகுதி இது.

அனைத்தையும் நாடி - பெயரை வைத்தே புரிந்திருக்கும். இதில் நீங்கள் எல்லா வகையான விடயங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

நாடி REVIEW - இலங்கையிலேயே தயார் செய்யும் படங்கள், குறும்படங்கள், பாடல்கள் என்பவற்றை பற்றி இதில் review செய்யப்படும்.

MACRO - கதைகள் - கதை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக வரமொருமுறை ஒரு சிறுகதை இந்த பகுதியில் பிரசுரமாகும்.