Back to Top

வாள்களுடன் இளைஞன் கைது

வாள்களுடன் இளைஞன் கைது

October 10, 2021  12:36 pm

Bookmark and Share
யாழ்.கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு சந்தேக நபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டில் வாள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அதன் போது வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 18 வயதான சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

-யாழ். நிருபர் ரமணன்-