Back to Top

அமானா வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு வரிக்கு பிந்திய இலாபம் 100%க்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

அமானா வங்கி 2021 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு வரிக்கு பிந்திய இலாபம் 100%க்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

October 11, 2021  12:11 pm

Bookmark and Share
பொருளாதார சவால்கள் நிலவிய போதிலும் நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் அமானா வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதியில் வங்கியின் வரிக்கு முன்னரான இலாபம் இரட்டிப்பாக அல்லது 102% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 505.7 மில்லியனாகவும், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 250.5 மில்லியனாகவும், வரிக்கு பிந்திய இலாபம் 70% இனால் அதிகரித்து ரூ. 289.3 மில்லியனாகவும் பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 170.4 மில்லியனாக பதிவாகியிருந்தது.

இரண்டாம் காலாண்டில் மாத்திரம் வரிக்கு முந்திய இலாபம் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் ஆகியன முறையே 310% இனால் அதிகரித்து ரூ. 288.6 மில்லியன் மற்றும் 291% இனால் அதிகரித்து ரூ. 158.6 மில்லியனாக பதிவாகியிருந்தது. நாட்டில் தொற்றுப் பரவல் காரணமாக இந்தப் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்திருந்தது. 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் வாடிக்கையாளர் முற்பணங்கள் என்பது 11 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 69.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. தொற்றுப்பரவல் காரணமாக பல தடங்கல்களுக்கு முகங்கொடுத்த போதிலும், பொருளாதார செயற்பாடுகளில் படிப்படியான முன்னேற்றம் பதிவாகியிருந்தமையை இது உணர்த்தியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகள் 9% இனால் அதிகரித்து ரூ. 90.9 பில்லியனாக உயர்ந்திருந்தது. 46% எனும் ஆரோக்கியமான CASA விகிதத்தை பேணியிருந்ததனூடாக வாடிக்கையாளர் வைப்புகள் வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. சந்தைப் போக்குகளில் சவால்கள் நிலவியிருந்த போதிலும், வங்கியின் செயற்படாத முற்பணங்கள் தொடர்ந்தும் வங்கித் துறையின் சராசரி பெறுமதியை விட குறைவாக காணப்பட்டது. நிகர செயற்படாத முற்பணங்கள்(Gross NPA) மற்றும் தேறிய செயற்படாத முற்பணங்கள் (Net NPA) ஆகியன முறையே 3.9% மற்றும் 1.2% ஆக காணப்பட்டன. விவேகமான முகாமைத்துவம் மற்றும் முறையான வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றினூடாக இவை பதிவாகியிருந்தன. ஜுன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் 6 மாத காலப்பகுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 108.7 பில்லியனாக பதிவாகியிருந்தது.

3.9% எனும் ஆரோக்கியமான நிதியியல் எல்லைப் பெறுமதியினூடாக, முற்பணங்களில் வளர்ச்சியின் காரணமாக வங்கியின் தேறிய நிதியிடல் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% இனால் அதிகரித்து 2.0 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. இதில் ரூ. 1.1 பில்லியன் பெறுமதி இரண்டாம் காலாண்டில் மாத்திரம் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது. மதிப்பிறக்கத்தின் பின்னர் தேறிய தொழிற்படு வருமானம் முதல் அரையாண்டிலும், 2ஆம் காலாண்டிலும் முறையே ரூ. 1.97 பில்லியனாகவும் ரூ. 1.03 பில்லியனாகவும் பதிவாகியிருந்தது. செலவுகளை கட்டுப்படுத்துவதில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியிருந்த நிலையில், 2020 முதல் அரையாண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தொழிற்படு செலவுகளில் 4% வீழ்ச்சி பதிவாகியிருந்தது. VAT வரி செலுத்தும் முன்னர் தொழிற்படு இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 74% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், இந்தப் பெறுமதி ரூ. 709.3 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் இரண்டாம் காலாண்டில் நிதிச் சேவைகள் 400.5 மில்லியனாக பதிவாகியிருந்தது. முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பு என்பது ரூ. 420.0 மில்லியனாக காணப்பட்டது. வங்கியின் சகல வரிக்கு முன்னதான தொழிற்படு இலாபத்தில் 59% ஆக காணப்பட்டது.

வங்கியின் பெறுபேறுகள் தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்திருந்த நிலையில், 2021 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் அமானா வங்கி இலாபகரத்தன்மை மற்றும் சொத்துக்கள் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தமையை குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் பெறுபேறுகளை எய்துவதற்கு வழிகாட்டல்களை வழங்கியிருந்த எமது பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், எமது ஊழியர்கள் மற்றும் சகல வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எம்மீதும், மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியிலும் நம்பிக்கை கொண்டுள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அண்மையில் பத்துவருட பூர்த்தியை நாம் கொண்டாடியிருந்தோம். எமது 5 ஆண்டு தந்திரோபாயத் திட்டத்துக்கமைய, எமது ஈடுபாட்டுடனான செயற்திறன் மிக்க அணியினால் எமது பெறுமதிக் கொள்கைகள் பேணப்படும் என்பதுடன், இந்த வளர்ச்சியை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் எய்தக்கூடியதாக இருக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.

2021 ஆகஸ்ட் 1ஆம் திகதி, அமானா வங்கி 10 வருட கால மக்களுக்கு நட்பான வங்கியியல் சேவையை பூர்த்தி செய்திருந்தது. இக்கால கட்டத்தில் வங்கியினால் ரூ. 100 பில்லியன் ரூபாய் மொத்த சொத்துகள் எனும் இலக்கு எய்தப்பட்டிருந்தது. 380,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டி வளர்ச்சியும் பதியப்பட்டிருந்தது. குறுகிய காலப்பகுதியில் வங்கி பதிவு செய்திருந்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவின் குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால் உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கி என கௌரவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் குளோபல் பாங்கிங் மற்றும் ஃபினான்ஸ் விருதுகளினால் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வங்கியாகவும் கௌரவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.