Back to Top

  'டபிள்கேஷ்' ஊக்குவிப்பை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

'டபிள்கேஷ்' ஊக்குவிப்பை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

October 11, 2021  02:49 pm

Bookmark and Share
வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மணிகிராம் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு தமது நிதியை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை கொமர்ஷல் வங்கி வழங்கவுள்ளது. இரண்டு உலகளாவிய ரீதியிலான பணப்பரிமாற்ற சேவை நிறுவனங்களோடு இணைந்து கொமர்ஷல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு மிக்க வாய்ப்பை வழங்கவுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 800,000 ரூபா பணத்தை 16 அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்து கொள்ள முடியும். ´டபிள்கேஷ்´ ஊக்குவிப்பு என அழைக்கப்படும் இந்தத் திட்டம் இரண்டு மாத காலம் நீடிக்கவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் வாராந்த சீட்டிழுப்பின் மூலம் அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுவர் என வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கிக் கிளையொன்றில் வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மணிகிராம் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெற்றுக் கொள்ளும் எவருக்கும் இது திறவலானது. ஒவ்வொரு சேவையில் இருந்தும் வாராந்தம் ஒரு அதிர்ஷ்டசாலி தெரிவு செய்யப்படுவார். தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு அவர் பெற்றுக் கொள்ளும் தொகை இரட்டிப்பாக்கப்படும். இதற்கான அதிக பட்ச தொகை ஒரு வாடிக்கையாளருக்கு 50 அயிரம் ரூபாவாக இருக்கும்.

ஊக்குவிப்பு காலம் 2021 நவம்பர் 15 வரை என வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளருக்கு உரிய பணம் அவருக்கு கொமர்ஷல் வங்கியில் ஏற்கனவே கணக்கு ஒன்று இருக்கும் பட்சத்தில் அன்றைய தினமே அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் கொமர்ஷல் வங்கி கிளையொன்றில் கணக்கொன்றைத் திறந்து அதன் விவரங்களை சமர்ப்பித்த உடன் உரிய பரிசுப் பணம் அந்தக் கணக்கில் வைப்பில் இடப்படும்.

மேலதிகமாக வெளிநாட்டில் இருந்து நேரடியாக கொமர்ஷல் வங்கியூடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் அல்லது அதற்கு இணையான நாணயத்துக்கு அன்றைய தினத்தின் உரிய நாணயமாற்று விகிதத்திலும் பார்க்க ஒரு அலகுக்கு மேலதிகமாக இரண்டு ரூபாய்கள் வழங்கப்படும் என வங்கி மேலும் அறிவித்துள்ளது.

வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மணிகிராம் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெற்றுக் கொள்பவர்கள் இந்தத் துறையில் இலங்கையில் அளப்பரிய சேவையாற்றி வரும் கொமர்ஷல் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ´டபிள்கேஷ்´ ஊக்குவிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிச் சேவையின் பிரதான பலமாக அமைந்திருப்பது அதன் 268 கிளைகளையும் 931 ATM இயந்திரங்களையும் கொண்ட வலையமைப்பாகும். இவற்றுள் பல பொது வர்த்தக மற்றும் வங்கி விடுமுறை தினங்களிலும் செயற்படுகின்றன. கொமர்ஷல் வங்கியின் ATM வலையமைப்பே இலங்கையின் தனியார் வங்கி ஒன்று கொண்டுள்ள மிகப் பெரிய வலையமைப்பாகும். வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை கொமர்ஷல் வங்கியூடாபக் பெற்றுக் கொள்பவர்கள் ஹொலிடே வங்கிச் சேவை நிலையங்கள் சுபர் மார்க்கெட் கரும பீடங்கள் வெளிநாட்டு பண வருகைக்கான அர்ப்பனிப்புடன் கூடிய வாடிக்கையாளர் ஆதரவு சேவை பணம் கணக்குக்கு வந்தவுடன் அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற குறுந்தகவல் சேவை என பல நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி ஆகும். வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள்ரூபவ் 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. அதேபோல் மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும்ரூபவ் மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.