Back to Top

21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்

21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்

October 13, 2021  01:26 pm

Bookmark and Share
ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதிக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (13) தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் "BIG FOCUS" கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுபோதனி குழுவின் அறிக்கை வர வேண்டும் எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிக்க இன்னும் 7 நாட்கள் இருப்பதால் கலந்துரையாடி உடனடியாக முடிவு ஒன்றை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.