Back to Top

குளவி கொட்டு 18 பேர் பாதிப்பு

குளவி கொட்டு 18 பேர் பாதிப்பு

October 13, 2021  02:44 pm

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஸ்டொக்ஹம் தொழிற்சாலை பிரிவில் 18 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இழக்காகி உள்ளனர்.

முதலாம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்களும் ஒரு ஒண் தொழிலாளியுமாக 18 பேர் இன்று (13) காலை 09.45 மணியளவில் குளவி கொட்டுக்கு இழக்காகி உள்ளனர்.

இவர்களில் ஐவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனையோர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-