Back to Top

பொலிஸ் மா அதிபர் யாழிற்கு விஜயம்

பொலிஸ் மா அதிபர் யாழிற்கு விஜயம்

October 13, 2021  02:55 pm

Bookmark and Share
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று மதியம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.

அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வது சம்பந்தமாக நாளை கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை சந்திக்கவுள்ள அவர் பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருந்து நாளை கிளிநொச்சிக்குப் பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-