Back to Top

பட்டா ரக லொறியில் கடத்தப்பட்ட கஞ்சா தொகையுடன் இருவர் கைது!

பட்டா ரக லொறியில் கடத்தப்பட்ட கஞ்சா தொகையுடன் இருவர் கைது!

October 14, 2021  09:20 pm

Bookmark and Share
மன்னார் - மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் பட்டா ரக லொறி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொதியினை நேற்று (13) பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பட்டா லொறி மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்-