Back to Top

நாட்டில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

October 24, 2021  07:32 pm

Bookmark and Share
நாட்டில் மேலும் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்று இதுவரை 555 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 536,084 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.