Back to Top

காலஞ்சென்ற வெலமிடியாவே குசலதம்ம தேரருக்கு முழு அரச மரியாதை! ஜனாதிபதி பணிப்புரை!

காலஞ்சென்ற வெலமிடியாவே குசலதம்ம தேரருக்கு முழு அரச மரியாதை! ஜனாதிபதி பணிப்புரை!

October 28, 2021  10:51 am

Bookmark and Share
காலஞ்சென்ற கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை முழு அரச மரியாதையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெலமிடியாவே குசலதம்ம தேரர் தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.

வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந்நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவை செய்த துறவியென்பது குறிப்பிடத்தக்கது.