Back to Top

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - PHI சங்கம் எச்சரிக்கை

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு - PHI சங்கம் எச்சரிக்கை

October 28, 2021  02:53 pm

Bookmark and Share
டிசம்பர் மாதம் ஆகும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் சகாதார நடைமுறைகளை மீறி சுற்றலாக்கள் சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் இரு வாரங்களில் மேலும் தொற்றாளர்களின் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவது பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் டிசம்பர் மாதத்தில் மக்கள் பண்டிகையை கொண்டாட முற்பட்டால் அடுத்த வருடமும் பாரிய அழிவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.