Back to Top

 சையது முஷ்டாக் அலி டி20 ​செம்பியன்!

சையது முஷ்டாக் அலி டி20 ​செம்பியன்!

November 23, 2021  08:05 am

Bookmark and Share
சையது முஷ்டாக் அலி கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியின் 13 ஆவது சீசனில் தமிழக அணி செம்பியன் ஆனது.

இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை வீழ்த்தியது தமிழகம்.

டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கா்நாடகம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வென்றது. தமிழக வீரா் ஷாருக் கான் ஆட்டநாயகன் ஆனாா்.

கா்நாடகம் - 151/7
அபினவ் மனோகா் 46
பிரவீண் துபே 33
ஜெகதீசா சுசித் 18

பந்துவீச்சு சாய் கிஷோா் 3/12
சஞ்ஜய் யாதவ் 1/32
சந்தீப் வாரியா் 1/34

தமிழகம் - 153/6
ஜெகதீசன் 41
ஷாருக் கான் 33*
ஹரி நிஷாந்த் 23

பந்துவீச்சு கரியப்பா 2/23
கருண் நாயா் 1/2
பிரதீக் ஜெயின் 1/34

சையது முஷ்டாக் அலி கிண்ண டி20 போட்டியில் தமிழகம் 3 ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. இதன் மூலம் இப்போட்டியில் இதுவரை அதிக முறை செம்பியன் ஆகிய ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.