Back to Top

Uber Entrepreneurship Challenge 2021 இல் புத்தாக்கம் மிக்க வணிக கருத்தாக்கங்களுக்கு அங்கீகாரம்

Uber Entrepreneurship Challenge 2021 இல் புத்தாக்கம் மிக்க வணிக கருத்தாக்கங்களுக்கு அங்கீகாரம்

November 23, 2021  07:04 pm

Bookmark and Share
Uber Entrepreneurship Challenge 2021 இல் புதுமையான வணிக கருத்தாக்கங்களுக்கு அங்கீகரிக்கும் முகமாக 10 வணிக பங்குதாரர்கள், ஓட்டுநர் பங்குதாரர்கள் மற்றும் கூரியர்களுக்கு ஆடம்பர ஹோட்டல் தங்குமிடங்கள், ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்கலான பலதரப்பட்ட பரிசுகளை Uber வழங்கியுள்ளது. இதன் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பார்க் ஸ்ட்ரீட் மியூஸ் இல் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இத்தொழில்துறையில் முதன்முதலாக இடம்பெற்ற இச்சவால் போட்டியானது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போட்டியானது வணிகர்கள், ஓட்டுநர்கள் மற்றும் விநியோகத்தர்கள் உள்ளடங்கிய பங்குதாரர்களுக்கு தமது தொழில் முனைவோர் மனப்பான்மை மற்றும் புத்தாக்க திட்டங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. இப்போட்டியில், உள்ளூர் தாவர உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்மரீன் வகைகள் மற்றும் ஹொட்டாக்ஸ் வகைகள் ஆகியவற்றின் தனித்துவமான செய்முறைக்காக, வணிகர் பிரிவின் வெற்றியாளராக ஷானி டயஸ் தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு Heritance Kandalama வில் 2 முழு இரவுகள் தங்குவதற்கான வாய்ப்பு மற்றும் Samsung Galaxy S7 Tab ஆகியவையும் வழங்கப்பட்டது. மேலும், Uber தளத்தின் மூலம் சேவைகளை விரிவுபடுத்தும் கருத்தாக்கத்திற்காக நிமேஷ் சந்தருவன் ஓட்டுநர்/கூரியர் பிரிவில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு புத்தம் புதிய Mahindra Centuro மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள், இலங்கையில் திறமைக்கும் புதிய சிந்தனை திறனுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. ஆகையால், நம் நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அவர்களின் கனவுகளை பின்தொடர்வதற்கும், தேசத்தை வலுப்படுத்துவதற்குமான வாய்ப்புகளை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம். இவ்வாறான Start-up முயற்சிகளுக்கு உகந்த கலாசாரத்தை உருவாக்குவது இந்த பணியின் ஒரு முக்கிய பகுதியாகும். Uber Entrepreneurship Challenge என்பது இந்த நோக்கத்திற்கு ஏற்ற ஒரு முன்முயற்சியாகும். எனவே, தினமும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த முன்னெடுப்பு தொடர்பாக Uber Sri Lanka வின் பொது முகாமையாளர் பாவ்னா டட்லானி கருத்து தெரிவிக்கையில், Uber மற்றும் Uber Eats ஆகிய தளங்களில் புதுமையான சிந்தனையுடைய தொழில்முனைவோரை அங்கீகரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாறிவரும் உலகில், விரைந்து செயல்படக்கூடிய வணிகங்கள் வாழ்க்கையையும் சமூகங்களையும் மாற்றக்கூடியனவாக இருக்கின்றன. எங்கள் பங்குதாரர்கள் எங்கள் செயல்பாடுகளின் மையத்திலே உள்ளனர், அவர்களின் வாழ்க்கையையும் வணிக செயல்பாடுகளையும் மேலும் மேம்படுத்த உதவும் வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். Uber Sri Lanka சார்பாக, அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர்களின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன். உள்நாட்டின் தொழில் முனைவோர் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவதற்கு ஏற்ற விதமாக இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு எனது மனப்பூர்வமாக நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இவ்வாறாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சந்தர்ப்பங்கள் பல அமையும் என எதிர்பார்க்கிறோம்.

Uber Entrepreneurship Challenge என்பது Uber இன் பங்குதாரர்கள் அவர்களது இலக்குகளை அடையவும் கனவுகளை மெய்யாக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும். பங்குதாரர்கள் Uber இன் வணிகத்தின் மையத்தின் இருப்பதினால், Uber Entrepreneurship Challenge ஆனது இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி சார்பான உள்ளடக்கத்தை முன்னெடுப்பதற்கான அதன் நீண்டகால மூலோபாயத்திற்கு இணங்க, அனைத்து பங்குதாரர்களுக்கும் பொருளாதார மற்றும் சமூக மதிப்பை உருவாக்குவதற்கான ஊபர் நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.

Uber மற்றும் Uber Eats பற்றி

அசைவின் ஊடாக வாய்ப்பை உருவாக்குவதே Uber இன் நோக்கம். ஒரு பட்டனைத் தொடுவதன் மூலம் சவாரிக்கான அணுகலை எவ்வாறு பெறுவது என்ற ஒரு எளிய சிக்கலைத் தீர்க்கும் நோக்கோடு 2010 இல் நாம் எமது பயணத்தை ஆரம்பித்தோம். 15 பில்லியனுக்கும் அதிகமான சவாரிகளுக்குப் பின்னர், மக்களை அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற விதமாக தயாரிப்புகளை உருவாக்குகிறோம். நகரங்கள் வழியாக மக்கள், உணவு மற்றும் ஏனைய பொருட்கள் ஆகியன பயணிக்கின்ற முறையை மாற்றுவதன் மூலம், Uber என்பது புதிய சாத்தியக்கூறுகளுக்கு உலகைத் திறக்கும் ஒரு தளமாக இருக்கின்றது.

உள்ளூர் உணவகங்களைத் தேடி கண்டறியவும், ஒரு பட்டனைத் அழுத்துவதன் மூலம் உணவை தெரிவு செய்து, நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் அதனை பெற்றுக்கொள்ளவும் Uber Eats வழிவகுக்கின்றது. இந்த வணிகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து Uber இன் தொழில்நுட்பம் மற்றும் இருப்பியக்க (logistics) நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உலகளவில் 6,000க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு தனது சேவையை வழங்கியுள்ளது.