Back to Top

MAS Holdings மற்றும் தேசிய பராலிம்பிக் சங்கம் இலங்கை பரா தடகள வீரர்களுக்கு வலுவூட்டுகின்ற ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளன

MAS Holdings மற்றும் தேசிய பராலிம்பிக் சங்கம் இலங்கை பரா தடகள வீரர்களுக்கு வலுவூட்டுகின்ற ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளன

November 23, 2021  07:14 pm

Bookmark and Share
MAS Holdings இன் ஒரு துணை நிறுவனமான MAS Innovation (Pvt.) Ltd., இலங்கை தேசிய பரா தடகள வீரர்களுக்கு புத்தாக்கமான, சிறந்த தரத்திலான விளையாட்டு உடைகளை வழங்குவதற்காக தேசிய பராலிம்பிக் சங்கத்துடன் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. 2021 நவம்பர் 23 அன்று MAS க்கும் தேசிய பராலிம்பிக் சங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து, தேசிய பராலிம்பிக் சங்கத்தின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக MAS ஐ ஸ்தாபித்துள்ளதன் மூலம், இலங்கை பராலிம்பிக் அணிக்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நடத்தப்படும் உள்ளூர் பயிற்சிகள், தேர்வு சோதனைகள் மற்றும் போட்டிகளுக்கு இந்த கூட்டாண்மை பொருந்தும்.

இந்த கூட்டாண்மையின் மூலம், MAS ஆனது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேசிய பராலிம்பிக் சங்கத்தின் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளராக செயற்படும் என்பதுடன், இலங்கையின் ஆசிய இளைஞர் பராலிம்பிக் அணியானது, உலகின் முன்னணி விளையாட்டு ஆடை வர்த்தகநாமங்களுக்கான தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை மற்றும் விளையாட்டு ஆடை உற்பத்தியாளரான MAS வழங்கும் விளையாட்டு உபகரணங்களை முதன்முதலில் பெற்றுக்கொள்ளும் அணியாக மாறும்.

“35 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒட்டுமொத்த பங்கேற்புடன் பாஹ்ரைனில் நடைபெறும் ஆசிய இளைஞர் பரா விளையாட்டுப் போட்டியின் 3 ஆவது பதிப்பில் இலங்கை சார்பில் ஆறு இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு நீச்சல் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். விளையாட்டு வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிடுவார்கள் என்பதுடன் இப்போது கொழும்பில் தங்கள் பயிற்சியின் கடைசிச் சுற்றில் உள்ளனர். MAS உடனான இந்த கூட்டாண்மை எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதுடன், அவர்களின் செயல்திறன் மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை உயர்த்தும்,” என்று தேசிய பராலிம்பிக் சங்கத்தின் தலைவரான லெப்டினன்ட் கேணல் தீபால் ஹேரத் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில் மட்டும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏதேனும் ஒருவகை மாற்றுத்திறனுடன் வாழ்கின்றனர். 15 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய பலர், பரா விளையாட்டுகளில் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் என்பதுடன், உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார சவால்கள் காரணமாக அடையாளம் தெரியாமல் போய்விடுகிறார்கள். ஒரு சிலருக்கு மாத்திரமே கழக அல்லது தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.

“இந்த திறமையான விளையாட்டு வீரர்களை ஆதரித்து, வலுவூட்டுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், என MAS இன் தலைமை புத்தாக்க அதிகாரியான ரணில் விதாரண அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர்ந்த தரமான தகவமைப்புக் கொண்ட விளையாட்டு ஆடைகளை கண்டுபிடிப்பதில் நாங்கள் முன்னணியில் இருப்பதுடன், மேலும் எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பரா விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தி, இலங்கையின் தேசிய பரா விளையாட்டுகளின் தரத்தை உயர்த்த எங்களால் முடியும் என்று நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் இரு கைகளையும், கால்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய போது வழக்கமான ஆடைகளுடன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, 2019 ஆம் ஆண்டில், தற்காலிக மற்றும் நிரந்தர மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் உள்ள நபர்களுக்குத் தேவையான தகவமைப்புக் கொண்ட ஆடையணிகள் துறையில் MAS கால்பதித்தது. அமெரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பயனர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் மூலம், சுயாதீனமாக ஆடை அணிவதைச் செயல்படுத்தும் தயாரிப்புகளை உருவாக்கி, மற்றும் முக்கிய ஆடையணிகளில் தகவமைப்பு செயல்பாட்டை MAS ஒருங்கிணைக்கிறது.

“சமூகங்களை உள்ளடக்கியதாகவும், முட்டுக்கட்டைகளைப் போக்குவதற்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர உதவும் வகையில் பயனுள்ள ஆடைத் தீர்வுகளை உருவாக்குவதே எங்கள் இறுதி நோக்கம் ஆகும், என்று விதாரண அவர்கள் மேலும் கூறினார்.

தகவமைப்புக் கொண்ட ஆடையணிகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பரா- தடகள வீரர்களான டோக்கியோ பராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளில் பங்கேற்ற அமாரா இந்துமதி மற்றும் குமுது பிரியங்கா உட்பட தகவமைப்புக் கொண்ட ஆடைகளை இணைந்து உருவாக்கி சோதனை செய்வதில் ஈடுபட்டுள்ள 380 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை MAS பணியில் அமர்த்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது MAS இன் அரவணைப்பு உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் ஒரு முன்னணி வர்த்தக நிறுவனமாக அதன் நிலைப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

MAS தொடர்பான விபரங்கள்: தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, ஆடை மற்றும் புடவை உற்பத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு முதல் வழங்கல் வரையான தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். 100,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு சமூகமாக, இன்று, 16 நாடுகளில் உள்ள உற்பத்தி ஆலைகளுடன் MAS எங்கும் வியாபித்துள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள முக்கிய நவீன பாணி மையங்களில் ஸ்தாபிக்கப்பட்ட வடிவமைப்பு அமைவிடங்கள் உள்ளன. வலிமையான மற்றும் எப்போதும் மாறிவரும் இத்தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்து, MAS தயாரிப்பு வரிசை அதிவேகமாக விரிவடைந்துள்ளதுடன், உலகளவில் வர்த்தகநாமங்கள், அணியக்கூடிய தொழில்நுட்பம், பெண்களுக்கான தொழில்நுட்பம், வணிக தொடக்க முயற்சிகள் மற்றும் துணி பூங்காக்கள் என பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளில், MAS அதன் நெறிமுறை மற்றும் நிலைபேண்தகு பணிச்சூழலுக்காகவும், சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு வலுவூட்டுதல் ஆகியவற்றில் நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தயாரிப்பு சிறப்பும் கைவினைத்திறனும் MAS ஐ உலக வரைபடத்தில் ஒரு தொழில்துறை முன்னோடியாக நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கமான உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் நம்பகமான விநியோகத்தை வெளிப்படுத்துகிறது. பணியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், தயாரிப்புகளை மேம்படுத்துவதன் மூலமும், அர்த்தமுள்ள கூட்டாண்மைகளில் ஈடுபடுவதன் மூலமும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக இருக்கவும், கனவுகளை நனவாக்கவும் மற்றும் நமது பூமியில் வாழ்வின் கட்டமைப்பை வளப்படுத்தவும் MAS விரும்புகிறது.