Back to Top

ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கைமுறையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு guilt-free 'Feelgood' உறைநிலை இனிப்புப்பண்டங்களை அறிமுகப்படுத்தும் எலிஃபன்ட் ஹவுஸ்

ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கைமுறையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு guilt-free 'Feelgood' உறைநிலை இனிப்புப்பண்டங்களை அறிமுகப்படுத்தும் எலிஃபன்ட் ஹவுஸ்

November 24, 2021  11:54 am

Bookmark and Share
ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கையை முறையை ஏற்றுக் கொள்ளும் நுகர்வோருக்காக இலங்கையின் முன்னணியாளரும், ஐஸ்கிறீம் வர்த்தக நாமமுான எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் guilt-free ´Feelgood´ உறைநிலை இனிப்புப்பண்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இன்று பெரும்பாலான வீடுகளில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு முறை குறித்துக் கவனம் செலுத்துகின்றனர். இந்த நீண்டகால அர்ப்பணிப்பானது சீனி உட்கொள்ளும் அளவைக் குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கியத்தை தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு வாடிக்கையாளர்களைத் தூண்டியுள்ளது. எனினும் இது எந்த குற்ற உணர்வும் இல்லாமல் பசியை திருப்திப்படுத்த வேண்டிய அவசியத்தைத் தடுக்காது.

நம்பகமான தரம் மற்றும் மேன்மை என்பவற்றால் எப்பொழுதும் இணைந்துள்ள இலங்கையின் உண்மையான வர்த்தக நாமம் என்ற ரீதியில் எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் தலைமுறைகளாக அனுபவிக்கப்பட்டு வருகிறது. எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் வளர்ந்துவரும் சுகாதார மற்றும் ஆரோக்கிய போக்குகளுக்கு ஏற்ப இத்துறையில் புத்தாக்கங்களுடன் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறது.

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்களுக்கான மாற்று வழிகளில் வாடிக்கையாளர்கள் தேடிவருவதைப் புரிந்துகொண்டு எலிஃபன்ட் ஹவுஸ் தற்பொழுது எளிமையான வாழ்க்கையை அளிக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Feelgood தெரிவுகளான, உறையவைக்கப்பட்ட யோகட், மிக்ஸ் பெரி, ட்ரொப்பிகல் மங்கோ மற்றும் சீனி சேர்க்கப்படாத சொக்டல் மற்றும் வனிலா என்பன கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன இந்த guilt-free உறைந்த இனிப்புக்களை வாடிக்கையாளர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த இலக்கைத் தொடர்ந்து கொண்டே பகலில் ஒரு சிற்றுண்டியாக கூட உட்கொள்ளப்படலாம். அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட உரிமைகோரல்களுடன், செயல்திறன் மிக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் வகையில் Feelgood தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உறைநிலை Feelgood யோகட் நுண்ணுயிர் கலந்த உணவுப்பொருளாக இருப்பதால் இது பரந்துபட்ட செரிமான நன்மைகளை வழங்குகிறது. மேலும், மிக்ஸ் பெரி, ட்ரொப்பிகல் மங்கோ உறைநிலை யோக்கட் என்பன இயற்கையாகவே இனிமையான அசல் பழத் துண்டுகளைப் பயன்படுத்தி குளிர்ச்சியான விருந்தளித்து வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக ஆரோக்கியமான தேர்வுகளை வழங்குகிறது. சுகாதாரம் குறித்த அக்கறையுள்ள இன்றைய வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் வகையில் சீனி சேர்க்கப்படாத Feelgood ஐஸ்கிறீம் வகைகள் அமைந்துள்ளன.

சூழலுக்கு நட்பான நடைமுறையப் பின்பற்றல் என்ற எலிஃபன்ட் கவுஸின் உறதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், Feelgood தொடரில் நவீன கண்டுபிடிப்புடன் கூடிய பேப்பர்களை அடிப்படையாகக் கொண்ட பொதியிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் உறைந்த இனிப்புக்கள் பிரிவின் தலைவர் சதிஷ் ரத்னாயக்க குறிப்பிடுகையில், ” எங்களின் புதிய Feelgood உறைந்த இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் தமது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துவதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எதிர்பார்க்கும் நபர்களின் தேவைக்கேற்ற தெரிவுகளை வழங்குவதற்கு நாம் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளோம். அதேநேரம், வாழ்க்கையின் இன்பங்களில் ஒன்றாகக் கொண்டாடுவதையும் இது உறுதிப்படுத்துகிறது” என்றார்.

Feelgood தொடர்கள் அனைத்து சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பலசரக்குக் கடைகள் மற்றும் மருந்தகங்களில் தற்பொழுது கிடைக்கிறது.