Back to Top

hSenid, CSE இல் ஆரம்ப பொது வழங்கலில் ஈடுபடும் முதல் மென்பொருள் நிறுவனமாகும்

hSenid, CSE இல் ஆரம்ப பொது வழங்கலில் ஈடுபடும் முதல் மென்பொருள் நிறுவனமாகும்

November 24, 2021  06:01 pm

Bookmark and Share
இலங்கையை தளமாக கொண்ட சர்வதேச மனிதவள மென்பொருள் தீர்வு வழங்குநரான hSenid Business Solutions, 2021 டிசம்பர் 3 ஆம் திகதி திறக்கப்படவுள்ள அதன் ஆரம்ப பொது வழங்கலுக்கு (IPO) முன்னதாக, முதலீட்டாளர் கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. மனித மூலதன மேலாண்மை (HCM) மென்பொருளுக்கான சர்வதேச சந்தையில் ஊடுருவியதன் மூலம் hSenidBiz அடைந்த முன்னேற்றங்களை இந்த நிகழ்வு வெளிப்படுத்திய அதே நேரத்தில் தான்சார்ந்த முதலீட்டு நிலையையும் சாத்தியமான முதலீட்டாளர்கள் மத்தியில் முன்வைத்தது. தனிநபர் மற்றும் நிறுவனப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த அளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பை இந்நிகழ்வு ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின்போது நிகழ்வின் பங்கேற்பாளர்கள் hSenidBiz இன் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் நேரடியாக தங்கள் கேள்விகளை கேட்டு தெளிவினைப் முதலீட்டாளர் மன்றத்தின் முடிவில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை பற்றி கருத்து தெரிவித்த hSenid Business Solutions நிறுவனத்தின் பணிப்பாளர்/தலைவர் தினேஷ் சபரமாது, “எங்கள் முதலீட்டாளர் மன்றத்தின் முடிவு மிகவும் நேர்மறையான பெறுபேறுகளை தந்துள்ளது.

இந்நிகழ்வின்போது எதிர்கால முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதிலளிக்க முடிந்ததோடு அவர்களின் கவலைகளுக்கு தீர்வு காணக் கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுக்கு அப்பால், எங்கள் IPO விற்கு பரந்த அளவிலான ஆர்வத்தைப் பெறுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அத்தோடு, இதன் ஆரம்ப நாளையும் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நாம் நன்றி தெரிவிப்பதுடன், இலங்கையின் வளர்ச்சி பாதையின் வர்ணனையில் இன்னும் பாரிய பங்கை வகிக்க நாம் முற்படுகையில், அனைத்து பங்குதாரர்களுக்கும் மிகச்சிறந்த நன்மதிப்பை தொடர்ந்து வழங்குவதற்கு நாம் உறுதியளிக்கிறோம்.

வெளியீட்டின் முன்னிலை முகாமையாளர்களான NDB முதலீட்டு வங்கி மற்றும் வெளியீட்டின் இணை முகாமையாளர்களான CT CLSA Capital ஆகியவற்றின் வழிநடத்தலில் கீழ், hSenid Business Solutions Limited மொத்த மூலதனத்தில் தோராயமாக ரூபாய் 692 மில்லியன் திரட்டும் நோக்கில், 55,339,076 சாதாரண வாக்குகள் அல்லாத பங்குகளை ஒரு பங்கு ரூபாய் 12.50 என்ற விலையில் பொதுமக்களுக்கு வழங்கும். இந்த நிதிகள் APAC மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பிராந்தியங்களில் மூலோபாய கையகப்படுத்துதல்களுடன் சேர்ந்து, தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தை மேம்பாட்டிற்கு அனுப்பப்படும். கடந்த 5 ஆண்டுகளில், hSenidBiz அனைத்து அடிப்படை குறிகாட்டிகளிலும் ஆரோக்கியமான இடைவெளிகளை கொண்டுள்ளது மட்டுமல்லாது சிறந்த செயல்திறனுடன் வருக்குப் பின்னரான இலாபத்திலும் வலுவான வளர்ச்சியை நிரூபித்துள்ளது.

இதுவரையான நிறுவனத்தின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திரு. சபரமாது, “Ward Place இல் உள்ள ஒரு சிறிய அறையில் இருந்து வெறும் மூன்று நபர்களுடன் hSenidBiz ஐ நாம் ஆரம்பித்தோம். முதல் நாளிலிருந்தே, சர்வதேச சந்தைகளுக்கான மனிதவள தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இன்று, உள்நாட்டில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாக, உள்ளூர் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் எங்கள் பங்கைச் செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். எங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநர்களை மேம்படுத்துவதற்கு வளங்களை உபயோகிக்கவும், Start-Up களுக்கு உதவவும் நான் விரும்புகிறேன்.

இலங்கையின் IT/BPM துறையில் ஒரு முக்கிய பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச சந்தைகள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையின் IT/BPM நிறுவனங்கள் மத்தியில் அதிகரிக்கவும் அவற்றை அணுகவும் உதவுவதுடன், எமது நிகர நேர்மறை அந்நிய செலாவணி மூலம் நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு உதவுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

இதைத் தொடர்ந்து, hSenid Business Solutions இன் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO)/பணிப்பாளர் திரு. சம்பத் ஜெயசுந்தர கருத்து தெரிவிக்கையில், IPO க்கு செல்வது என்பது HSenidBiz இன் அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு அற்புதமான மைல்கல். இது குறிப்பிட்ட சில நபர்களின் சாதனைகள் அல்ல. அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், கூட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய வலையமைப்பின் பயணமாகும். பாரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்தமை எங்கள் அதிர்ஷ்டம். இந்நிறுவனங்களுடன் பணிபுரிந்தமை மூலம் மனிதவள நடைமுறைகள் பற்றிய தனித்துவமான நுண்ணறிவுகளை நாம் பெற்றுக்கொண்டோம். மேலும், உலகளாவிய ரீதியில் அளவிடக்கூடிய புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் இந்த அனுபவம் எங்களுக்கு உதவியது. எமது குழு அங்கத்தவர்களின் கண்ணோட்டத்தில், ஆலோசனைகள் முதல் பொறியியல் வரையான விடயங்களுக்கு, உலகளாவிய தீர்வை உருவாக்க தகுதியான நபர்களைக் கொண்டிருப்பது ஒரு பெரிய பலமாக உள்ளது. இது நிச்சயமாக எங்கள் தயாரிப்புகளை முன்னணி சர்வதேச வர்த்தகக் குறிகளுடன் தரவரிசைப்படுத்த ஒரு படிக்கல்லாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்துறைகள் மற்றும் புவியியல் சூழல்களுக்கமைய தனித்துவமான வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் புதிய அம்சங்களைச் சேர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.

உலகளாவிய ரீதியில் எங்கள் பங்காளரின் வலையமைப்பு இல்லாமல், 40க்கும் அதிகமான நாடுகளில் நாங்கள் மேற்கொண்ட உலகளாவிய விரிவாக்க நடவடிக்கைகள் சாத்தியமற்றதாக இருந்திருக்கும். இந்த பயணத்தில் எங்களுடன் நின்ற அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிக்கும் அதே வேளையில், hSenidBiz இன் எதிர்காலத்திற்காக இந்த IPO வழங்க இருக்கும் புதிய வாய்ப்புகளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். பல்வேறு சூழல்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவகையில் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய சர்வதேச தரமிக்க மனிதவள தீர்வு வர்த்தக நாமத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மேலும் APAC மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களிலும் நாங்கள் முன்னிலை வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

1997 இல் நிறுவப்பட்ட, hSenidBiz இன்று ஒரு உலகளாவிய இலங்கை மென்பொருள் தீர்வு நிறுவனமாக வர்ந்துள்ளது. இது அதிநவீன HR தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. hSenidBiz மென்பொருளானது 1,300 உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் 1,000,000 பயனர்களாலும், 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 20 பலதரப்பட்ட தொழில்துறைகள் மற்றும் வணிகத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆசியா பசிபிக் மற்றும் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் வலுவான இருப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. hSenidBiz நிறுவனமானது தற்சமயம் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ளதோடு, அதன் 25 வருட வரலாற்றில் 4,000 தனிநபர் தொழில்நுட்ப பயணப்பாதைகளுக்கு பங்களித்துள்ளது. hSenidBiz இன் முன்னாள் மாணவர்கள் இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் முழுவதும் தொழில்நுட்பத்தில் சிறந்த விஷயங்களைச் சாதித்து வெற்றிகரமான வாழ்க்கையை தமக்காக உருவாக்கியுள்ளனர்.