Back to Top

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - கொலை என சந்தேகம்?

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு - கொலை என சந்தேகம்?

November 24, 2021  06:11 pm

Bookmark and Share
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உணம்புவ பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து கல்வெல பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள கட்டிடம் ஒன்றுக்கு அருகில் இருந்தே சுமார் 34 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கும் கம்பளை பொலிஸார், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கண்டி நிருபர் ராஜ்-