Back to Top

படகு விபத்தில் உயிரிழந்த சிறுமிகள் 2 நாட்களுக்கு முன் பதிவு செய்த காணொளி வைரல்...

படகு விபத்தில் உயிரிழந்த சிறுமிகள் 2 நாட்களுக்கு முன் பதிவு செய்த காணொளி வைரல்...

November 25, 2021  08:44 pm

Bookmark and Share
திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து கடந்த தினம் இடம்பெற்ற அனர்த்தத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

குறித்த காணொளி தற்போது சமூக ஊடங்களில் தீயாக பரவி வருகின்றது.



இதேவேளை, திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர மேயர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மேயர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.