Back to Top

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி!

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் அவதி!

November 25, 2021  10:26 pm

Bookmark and Share
வவுனியா திருநாவற்குளத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக திருநாவற்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் இவ்வீடுகளில் வசிப்பவர்கள் தற்போது உறவினர்கள் வீடுகளில் வசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் பல வீதிகள் நீரில் முழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் மழை காலங்களில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

-வவுனியா தீபன்-