Back to Top

லிட்ரோ, லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எழுத்து மூல அறிவித்தல்

லிட்ரோ, லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எழுத்து மூல அறிவித்தல்

December 3, 2021  09:30 am

Bookmark and Share
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ethyl mercaptan வாசனை அளவை 14 ஆக உயர்த்தும் வரை விநியோகத்தை நிறுத்துமாறு இரண்டு LPG விநியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்நாட்டு LP எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக Litro Gas நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வந்த கப்பலில் இருந்து சோதனைக்காக பெறப்பட்ட எல்பி எரிவாயு மாதிரிகள் உள்நாட்டு நிலையான கலவையுடன் பொருந்தினால் மட்டுமே இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.