Back to Top

லாஃப்ஸ் கேஸ் விநியோகம் தொடர்பான புதிய அறிவிப்பு

லாஃப்ஸ் கேஸ் விநியோகம் தொடர்பான புதிய அறிவிப்பு

December 3, 2021  11:57 am

Bookmark and Share
லாஃப்ஸ் கேஸ் விநியோகத்தை நிறுத்துமாறு எந்தவித அறிவுறுத்தல்களும் தமக்கு இதுவரை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினரால் வழங்கப்படவில்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ethyl mercaptan வாசனை அளவை 14 ஆக உயர்த்தும் வரை விநியோகத்தை நிறுத்துமாறு இரண்டு LPG விநியோகஸ்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்நாட்டு LP எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக Litro Gas நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed