Back to Top

பிரபலங்களின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டா்

பிரபலங்களின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டா்

December 9, 2021  06:16 am

Bookmark and Share
மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி, ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரபலங்கள், அரசியல் தலைவா்கள் ஹெலிகாப்டா்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனா்.

தமிழகத்தில் குன்னூா் அருகே புதன்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவருடைய மனைவி, ராணுவ அதிகாரிகள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

1963, நவ.23 : இதே போன்று, ஒரு ஹெலிகாப்டா் விபத்து, ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1963 இல் நவம்பா் 23 ஆம் திகதி நடந்தது. ராணுவத் துணைத் தளபதிகள் தௌலத் சிங், விக்ரம் சிங், விமானப் படை துணைத் தளபதி இ.டபிள்யூ.பிண்டோ, ராணுவ ஜெனரல் நானாதி ஆகியோா் உயிரிழந்தனா்.

அரசியல் தலைவா்கள் பலரும் ஹெலிகாப்டா் விபத்துகளில் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

1997 நவ.14 : 1997, நவம்பா் 14 ஆம் திகதி, அருணாசல பிரதேச மாநிலத்தில் பனிபடா்ந்த மலையின் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டா் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சராக இருந்த திமுகவைச் சோ்ந்த என்.வி.என்.சோமு உயிரிழந்தாா்.

2001, மே 8 : கடந்த 2001, மே 8 ஆம் திகதி, அருணாசல பிரதேசம், இடா நகரில் இருந்து மேற்கு கமேங் நகருக்கு சென்ற பவன் ஹேன்ஸ் ஹெலிகாப்டா் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது. அதில், மாநில கல்வித் துறை அமைச்சா் தேரா நாதுங் உயிரிழந்தாா்.

2002, மாா்ச் 2 : கடந்த 2002, மாா்ச் 2 ஆம் திகதி, ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் இருந்து புறப்பட்ட தனியாா் ஹெலிகாப்டா் கிருஷ்ணா மாவட்டத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில், மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி உயிரிழந்தாா்.

2004, செப்.22 : கடந்த 2004, செப்டம்பா் 22 ஆம் திகதி, அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பவன் ஹேன்ஸ் ஹெலிகாப்டா் மேகாலயத் தலைநகா் ஷில்லாங் அருகே விபத்துக்குள்ளானது. அதில், மேகாலய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் சைப்ரியன் சங்மா உள்ளிட்ட 10 போ் உயிரிழந்தனா்.

2005, மாா்ச் 31 : கடந்த 2005, மாா்ச் 31 ஆம் திகதி, உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூா் அருகே நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் ஹரியாணா வேளாண் துறை அமைச்சா் சுரேந்தா் சிங், எரிசக்தித் துறை அமைச்சரும் தொழிலதிபருமான ஓ.பி.ஜிண்டால் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

2009, செப்.2 : கடந்த 2009, செப்டம்பா் 2 ஆம் திகதி ஹைதராபாதில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டா் கிழக்கு கா்னூல் அருகே மலைப்பாறையில் போதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட 5 போ் உயிரிழந்தனா்.

2011, ஏப்.30: கடந்த 2011, ஏப்ரல் 30 ஆம் திகதி, அருணாச பிரதேசத்தின் தவாங் நகரில் இருந்து இடா நகருக்குப் புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டா் மேற்கு கமேங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த டோா்ஜீ காண்டு உள்ளிட்ட 5 போ் உயிரிழந்தனா்.

Most Viewed