Back to Top

 இஸ்லாத்தை துறந்தவா்களுக்கு - முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு!

இஸ்லாத்தை துறந்தவா்களுக்கு - முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு!

January 10, 2022  06:49 am

Bookmark and Share
கேரளத்தில் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கில் ‘கேரளத்தின் முன்னாள் முஸ்லிம்கள்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் திகதி அந்த அமைப்பின் தொடக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கேரளத்தின் முன்னாள் முஸ்லிம்கள்’ அமைப்பின் நிா்வாகிகள் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அந்த அமைப்பின் நிா்வாக உறுப்பினா் ஆரிஃப் ஹுசைன் கூறுகையில், ‘‘கேரளத்தில் இஸ்லாம் மதத்தை துறந்த ஒரே காரணத்துக்காக, அந்த மதத்திலிருந்து வெளியேறியவா்கள் இன்னல்களை எதிா்கொள்கின்றனா். அவற்றை பிற மதத்தினரின் இன்னல்களுடன் ஒப்பிட முடியாத வகையில், அளவுக்கு அதிகமாக உள்ளது.

இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவா்கள் உடலளவிலும் மனதளவிலும் அச்சுறுத்தப்படுகின்றனா். சமூகத்தில் வாழ்வதற்கான அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனா். அவா்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்யவும் ‘கேரளத்தின் முன்னாள் முஸ்லிம்கள்’ என்ற அமைப்பைத் தொடங்குவது அவசியமாகியுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

அந்த அமைப்பின் தலைவா் லியாகத் அலி கூறுகையில், ‘‘இஸ்லாம் மதத்தைத் துறக்க விரும்புவோருக்கு சட்ட, தாா்மிக, சமூக ஆதரவை ‘கேரளத்தின் முன்னாள் முஸ்லிம்கள்’ அமைப்பு வழங்கும்.

மதச் சம்பிரதாயங்கள் அல்லது நடைமுறைகள் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகளை மீறும் அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக நீதிமன்றத்தை அணுகவும் இந்த அமைப்பு திட்டமிட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

இதுபோன்ற அமைப்பு நாட்டில் அதிகாரபூா்வமாக தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று தெரிவித்த ‘கேரளத்தின் முன்னாள் முஸ்லிம்கள்’ நிா்வாகிகள், ஜனவரி 9-ஆம் தேதியை அந்த அமைப்பின் தொடக்க தினமாக அறிவித்தனா்.