Back to Top

செலிங்கோ லைஃப் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி வழங்குனராக சாதனைக்குரிய 8வது தொடர்ச்சியான விருதை வென்று சாதனை

செலிங்கோ லைஃப் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி வழங்குனராக சாதனைக்குரிய 8வது தொடர்ச்சியான விருதை வென்று சாதனை

January 11, 2022  05:19 pm

Bookmark and Share
செலிங்கோ லைஃப் சவாலான ஆனால் வினைத்திறன் மிக்க ஆண்டில் பிரிவுகள் ரீதியிலான முன்னணி பெறுபேறுகளை அங்கீகரித்து வழங்கப்பட்ட வேள்ட் ஃபினான்ஸ் சஞ்சிகையின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி வழங்குனர்´ விருதை எட்டாவது தடவையாக வென்று 2021 ஐ ஒரு உயர்வான மட்டத்தில் நிறைவு செய்துள்ளது.

வேள்ட்ஃபினான்ஸ் க்ளோபல் காப்புறுதி விருது (World Finance Global Insurance Award), வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குவதற்காகத் தனது செயன்முறைகள் செயற்றிறன் உறவுகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்காகத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும்ஒரு நிறுவனமாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தை அங்கீகரிக்கிறது. நிதியியல் தொழிற்றுறை சர்வதேச வணிகம் பூகோளப் பொருளாதாரம் ஆகியவற்றை ஆராயும் ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த சர்வதேசச் சஞ்சிகையான வேள்ட் ஃபினான்ஸ் செயற்பாட்டுப் பெறுபேறுகளின் பல்வேறு அம்சங்களை மதிப்பிட்டுக் கௌரவத்தை வழங்குகிறது.

நிறுவனமானது சந்திக்கும் ஒவ்வொரு சவாலிலும் வாய்ப்புக்களை நோக்குகின்ற ஒரு கலாசாரத்தினால் செலிங்கோ லைஃப் உந்தப்படுகிறது என்று கருத்து தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. துஷார ரணசிங்க ´இந்தக் கொவிட் தொற்றானது எமது வியாபாரத்தின் தொடர்ச்சியை மட்டுமன்றி அதன் பல்வேறு அம்சங்களையும் பார்க்கத் தூண்டியுள்ளது. வாடிக்கையாளரின் நலன் மற்றும் ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்த ஒரு சமநிலையான வளர்ச்சி மற்றும் காப்புறுதி தீர்வுகள் வழங்குதலும் அதற்கான சேவைகள் வழங்குதலும் உரிமைகோரல்கள் செலுத்தப்படுதல்ரூபவ் புதிய திட்டங்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாளர்களின் நன்மைகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை தடையின்றி வழங்குவது போன்றனவாகும். 2020 2021 ஆம் ஆண்டுகளில் இந்த சகல அம்சங்களையும் நாம் அடைந்தது அல்லது பூர்த்துசெய்யக் கூடியதாக இருந்ததற்கான காரணம் எமது பங்காளர்கள் மீது கொண்ட நம்பிக்கையே ஆகும்.´

ஒரு ஆயுள் காப்புறுதியில் underwriting செயல்முறைகள் மற்றும் செயல் முறைகளில் உள்ள செயல்திறன் ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்களை பராமரித்தல் அதாவது ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களின் காப்புறுதி ஆய்வு செய்வது செய்யும் முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஆயுள் காப்புறுதி அளவு ஒவ்வொரு ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்களுக்கான செலவு ஆயுள் காப்புறுதிகளுக்கான ரிஸ்க் தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை நிறுவனத்தோடு தக்கவைத்துக்கொள்ளும் விகிதங்கள் ஒவ்வொரு உரிமை கோரல்களும் செலுத்த எடுத்துக்கொள்ளும் நேரம் புது வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொள்ளும் விகிதம் மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மையைக் காட்டும் காப்புறுதிக் கட்டுப்பண வருமானம் சந்தைப் பங்கு ஆயுள் காப்புறுதி நிதியம் மற்றும் நிறுவனம் பெறும் லாபம் என்பன கருத்திற்கொள்ளப்பட்டன.

விருதுகளை வழங்கிய நடுவர் குழாமானது 230 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிதியியல் வணிக ஊடகவியல் அனுபவத்தைக் கொண்டிருந்ததோடு குறிப்பிட்ட துறைகளில் விருதுகளை வெல்வோர் அவ்விருதுகளுக்கு பொருத்தமானவர்கள் என்பதை உறுதிசெய்யவதற்காக இடைவிடாது பணியாற்றும் ஆராய்ச்சி அணியால் ஆதரவளிக்கப்பட்டனர். மேலதிகமாக வாசகர் உள்நோக்கு அனுபவம் ஆகியனவும் இந்த முன்மொழிவுகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. வெவ்வேறான புவியியல் சூழல்கள் தனித்தன்மையான பிராந்தியங்கள் தொடர்பான உள்ளடக்கங்களைப் பெறுவதற்காக செயல்பாட்டு உள்ளடக்கம், நிறுவனத்தின் அளவுபோன்றன தொடர்பான பக்கச்சார்புகளைத் தவிர்க்க வேண்டிய கடப்பாடு நடுவர்களுக்கு இருந்தது.

இலங்கையில் உள்ள ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் இவ்விருதைத் தொடர்ச்சியாக எட்டுத் தடவைகள் வென்ற ஒரே நிறுவனமாக செலிங்கோ லைஃப் காணப்படுகிறது. இது நிதியியல் உறுதிப்பாட்டை மாத்திரமன்றி புத்தாக்கத்தையும் அர்ப்பணிப்பையும் முக்கியமாகக் கொண்ட அர்ப்பணிப்பானசெயற்பாடுகள் ஏனைய நிறுவனங்களை விட செலிங்கோ லைஃப் நிறுவனத்தைச் செயற்றிறன் ஒட்டுமொத்தமான செயல்நிலை முகாமைத்துவம் வாடிக்கையாளர் உறவு ஆகியவற்றில் தனித்து நிற்பதற்கான உறுதிசான்றாக விளங்குகிறது.

வேள்ட்ஃபினான்ஸ் சஞ்சிகையின் விருது நிகழ்ச்சித் திட்டம் 2007ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு ஒவ்வொரு சந்தைக்குமென மிகச்சிறந்த முழுமையான ஆய்வை வழங்குவதற்காகக் காணப்படுகிறது. செலிங்கோலைஃப் செயற்பட்டுவரும் தனது 32 ஆண்டுகளில் அதன் அரைவாசிக் காலம் முழுதும் நாட்டின்காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. GreatPlace to Work® நிறுவனத்தால் இலங்கையில் பணியாற்றுவதற்குச்சிறந்த இடங்களின் ஒன்றாக ‘GreatWorkplace’ எனச் சான்றளிக்கப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான பிரான்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை 2020ஆம் ஆண்டுவென்றதோடு அதேயாண்டு இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள்விருதுகளில் தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாகவும் ஆண்டுக்கான மக்களின் ஆயுள்காப்புறுதிச் சேவை வழங்குநர் விருதையும் வென்றது. முகாமைத்துவக்கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்துடன் (Chartered Institute of Management Accountants - CIMA) இணைந்து இலங்கையின் வர்த்தகத்துக்கான சர்வதேச சம்மேளனத்தால் (International Chamber of Commerce Sri Lanka) 2019-20 காலப்பகுதிக்காக இலங்கையில் அதிகம் வியக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் கௌரவக் குறிப்பீடு (Honourable Mention) ஒன்றையும் செலிங்கோ லைஃப் பெற்றிருந்தது. செயற்படுநிலையிலுள்ள சுமார் பத்து இலட்சம் காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டுள்ள செலிங்கோ லைஃப் நிறுவனமானது புத்தாக்கம் உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் வாடிக்கையாளர் சேவை தொழில்வாண்மை அபிவிருத்தி கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.

செயற்படுநிலையிலுள்ள சுமார் பத்து இலட்சம் காப்புறுதிக் கொள்கைகளைக் கொண்டுள்ள செலிங்கோ லைஃப் நிறுவனமானது புத்தாக்கம் உற்பத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வாடிக்கையாளர் சேவை தொழில்வாண்மை அபிவிருத்தி கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.