Back to Top

'கொம்பாங்க் டிஜிட்டல்' தற்போது Huawei AppGallery யிலும் கிடைக்கின்றது

'கொம்பாங்க் டிஜிட்டல்' தற்போது Huawei AppGallery யிலும் கிடைக்கின்றது

January 13, 2022  01:22 pm

Bookmark and Share
புகழ்பெற்ற Huawei நடமாடும் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் தற்போது நேரடியாக ´கொம்பாங்க் டிஜிட்டல்´ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Huawei AppGallery மூலம் கொமர்ஷல் வங்கியின் இந்தப் பிரத்தியேக செயலியை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று வங்கி அறிவித்துள்ளது.

கொம்பாங்க் டிஜிட்டல் செயலி 2020 ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது iOS மற்றும் அன்ட்ரோயிட் செயற்பாட்டு முறைகளோடு முழுமையான இணக்கம் கொண்டது அத்தோடு சர்வதேச தரமும் கொண்டது. பாவனையாளர் பாதுகாப்புக்கு அதி உச்ச உத்தரவாதத்தை வழங்கும் செயற்பாட்டினையும் கொண்டது. இதன் பாவனையாளர் தளம் நாளாந்தம் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் மேடை தற்போது அதிகம் பிரபலம் அடைந்து வருவதும் நிரூபணமாகி உள்ளது. இதனால் வங்கி தொடர்ந்து பல முன்னேற்றங்களையும் விரிவாக்கத்தையும் தனது டிஜிட்டல் செயலியில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே Huawei AppGallery யிலும் தற்போது இந்த செயலி சேர்க்கப்பட்டுள்ளது.

Huawei AppGallery யிலிருந்து நேரடியாக இந்த செயலியை தரவிறக்கம் செய்த பின் Huawei நடமாடும் தொலைபேசிப் பாவனையாளர்கள் தமது நிதி முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுவாகவும் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள முடியும். வங்கி முகவர் ஒருவரின் உதவியின்றி பாவனையாளர்களே தமது விருப்பத் தெரிவுக்கு இசைவாக செயற்பாடுகளை மேற்கொள்ளத் தக்கதாக இந்த செயலியை கொமர்ஷல் வங்கி உருவாக்கி உள்ளது.

மடிக் கணினிகள் டெப்லட் கருவிகள் நடமாடும் தொலைபேசிகள் என எல்லாவகையான கருவிகள் மூலமாகவும் கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் மிக வசதியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். கொமர்ஷல் வங்கிக் கணக்கு உள்ள எவரும் இணையவழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம். அதன் மூலம் கொமர்ஷல் வங்கியின் இந்த செயலியைப் பெற்று கடன் விண்ணப்பங்கள் உட்பட இன்னும் பல்வேறு வசதிகளை அனுபவிக்கலாம்.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கிரூபவ் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கிரூபவ் கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 931 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியதுரூபவ் அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.

Most Viewed